சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஊழல் குறித்த மூன்று கோப்புகள் தன்னிடம் இருப்பதாக முதல்வர்தான் கூறியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் அவர்கள்தான் எனவும் கூறினார். மக்களுக்கு விரோதமாக நடந்து கொண்டால் ஆதரவளித்த கட்சியையும் எதிர்ப்போம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அரசுக்கு ஆதரவும் தொடரும், இடித்துரைப்பதும் தொடரும் என்று சண்முகம் குறிப்பிட்டார்.
அனைத்து ஆட்சிக்காலத்திலும் மக்களுக்கு சாதகமான திட்டத்தை ஆதரிப்போம் என்றும் எதிரான திட்டத்தை எதிர்ப்பும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம் தொடர்பான அரசாணையை வெளியிட்டது ஏன் என்று கேட்டார். பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம் விவகாரத்தில் முதல்வர் முடிவெடுக்காமல் எப்படி அரசாணை வெளிவந்தது என்றும் சண்முகம் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

பொதுமக்களிடமிருந்து தமிழக வெற்றிக்கு கழக வேட்பாளர்களை காப்பாற்றவே போலீஸ் பாதுகாப்பு எனவும் குறிப்பிட்டார். சமாளிப்பதற்காக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார். திமுக ஆட்சியில் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து தாங்கள் போராடி தடுத்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு பேசினார். சாம்சங் போராட்டம் உள்ளிட்டவற்றில் திமுக அரசை தாங்கள் திக்கு முக்காட செய்தோம் என கூறினார்.
இதையும் படிங்க: தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்..! புதிய தலைமைச் செயலகம்..! CPM சண்முகம் விமர்சனம்!!
குற்றச்சாட்டுகளை கூறினால் ஏன் அப்போது கூறவில்லை என கேட்டு திசை திருப்ப கூடாது என்றார். எதற்காக ராஜினாமா செய்தார்கள் என்றும் எதற்காக அதே பதவியை அடைய வேண்டும் என்று துடிக்கிறார்கள் என தெரியவில்லை எனவும் கூறினார். 20 நாளில் ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் எதற்காக தேர்தலில் நிற்கிறார்கள் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: யுபிஐ கட்டண கொள்ளையை உடனே கைவிடுக! மத்திய அரசுக்கு பெ.சண்முகம் கண்டனம்!