சிவகாசி பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்களது பரிந்துரைகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு (DLSA) தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
சிவகாசி பட்டாசு ஆலை விபத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2014 ஆம் ஆண்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது மேலும் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன இந்த வழக்குகள் நீதிபதிகள் சிவி கார்த்திகேயன் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது இதற்கு முன்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, ஆகஸ்ட் 6-ந் தேதி விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் ‘திடுக்’ திருப்பம்... வெளியானது விபத்துக்கான முக்கிய காரணம்... ஹைஅலர்ட்டில் போலீஸ்...!
ஆனால், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மட்டும் இதுவரை தங்களது பரிந்துரைகளை வழங்கவில்லை என மாவட்ட முதன்மை நீதிபதியும், DLSA தலைவருமானவர் நீதிமன்றத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.
இதையடுத்து, பட்டாசு ஆலைகளில் விபத்துகளைத் தடுப்பதற்கும், அவற்றின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதற்கும் தேவையான பரிந்துரைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர். உடனடியாக DLSA தலைவரிடம் வழங்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் DLSA தலைவர் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!