• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சிக்கலில் சி.டி.ஆர்... செம்ம டென்ஷனில் விஜய்... மக்களிடம் டோட்டலாக டேமேஜ் ஆன தவெக இமேஜ்...!

    இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Fri, 16 Oct 2026 14:29:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CTR Under issue on EB Tender

    தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மின்சாரத் துறை தொடர்பான புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தவெக ஆட்சி அமைந்த சில நாட்களிலேயே தமிழகத்தில் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டு ஏற்படத் தொடங்கியது. பல்வேறு இடங்களில் மின்மாற்றிகளில் ஏற்பட்ட கோளாறுகள், மின்சாரத் துண்டிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் மக்கள் வீதிகளில் இறங்கி இரவு, பகலாகப் போராடும் நிலை உருவானது.

    இதையடுத்து, மின் கட்டண உயர்வு தொடர்பான சர்ச்சையும் தலைதூக்கியது. ஏற்கெனவே 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், 500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கும் புதிய திட்டமும் தவெக ஆட்சியில் அமலுக்கு வந்தது. இருப்பினும், மின் கட்டணம் எதிர்பாராத வகையில் உயர்ந்தது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    கோடை வெப்பத்தின் தாக்கத்தால் மின்சாரப் பயன்பாடு அதிகரித்ததே மின் கட்டண உயர்வுக்குக் காரணம் என விளக்கம் அளிக்கப்பட்டாலும், பல இடங்களில் தவறான மின் கணக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகளும் தவெக ஆட்சிக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரிக்கக் காரணமாக அமைந்தன.

    இதையும் படிங்க: இன்னும் 2 வருஷம்.. அதிமுகவுக்கு வந்த அதே நிலைமை திமுகவுக்கும் வரும்..!! அமைச்சர் நிர்மல் குமார் சாடல்..!!

    புதிதாக ஆட்சிக்கு வந்த தவெக அரசுக்கு மின்வெட்டு விவகாரம் சவாலாக மாறிய நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி விமர்சனங்களை முன்வைத்து வந்தன. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    அதாவது, அக்டோபர் மாத மின் தேவையைச் சமாளிப்பதற்காக 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில், 1,500 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.31 முதல் ரூ.35 வரையிலும், மாலை நேர உச்சபட்ச மின் தேவையைச் சமாளிப்பதற்குத் தேவையான 200 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.33 முதல் ரூ.37 வரையிலும் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    அண்டை மாநிலமான ஆந்திராவில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.16 முதல் ரூ.20 வரையிலான விலையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 2023ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.20-க்கு கொள்முதல் செய்யப்பட்டதே அதிகபட்ச விலையாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது தவெக அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.37 வரை கொடுத்து வாங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மின் தேவை கணிசமாக அதிகரித்திருந்தாலும், அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதற்கு அலட்சியமே காரணம் எனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

    அக்டோபர் மாத மின் தேவைக்கான ஒப்பந்தப்புள்ளி, மின் தேவை ஏற்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் கோரப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதால் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

    மேலும், மத்திய மின் தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய சுமார் 1,500 மெகாவாட் மின்சாரமும் கிடைக்காத சூழலில், வேறு வழியின்றி அவசரமாக அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்கூட்டியே திட்டமிட்டு ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்தால், இவ்வளவு அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது எனக் கூறப்படும் நிலையில், மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகளும் அமைச்சருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளன.

    உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கும் எதிர்ப்பு: 

    இதற்கிடையே, உடன்குடி அனல்மின் நிலையத்தைத் தனியார் பங்களிப்புடன் விரிவாக்கும் முடிவும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.

    உடன்குடி அனல்மின் நிலையத்தில் மொத்தம் 3,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டம் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விரிவாக்கப் பணிகளுக்கு மொத்தம் ரூ.32,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், தனியார் பங்களிப்பு மூலம் தற்போதைக்கு அரசின் செலவைக் குறைக்க முடியும். ஆனால், எதிர்காலத்தில் தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம்.

    அவ்வாறு அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அதன் தாக்கம் நுகர்வோரின் மின் கட்டணத்திலும் எதிரொலிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும், மின்சாரத் தேவைக்குத் தனியாரையே நம்பியிருக்க வேண்டிய சூழல் உருவாகும் என்பதால், மின்வாரியத்தின் இந்த முடிவுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    மின்வாரிய நிர்வாகத்தில் தொடரும் சர்ச்சைகள்: 

    ஏற்கெனவே மின்வாரியம் அதிக கடன் சுமையில் தத்தளித்து வருகிறது. முந்தைய ஆட்சிக் காலத்தில் மின் தேவையைச் சமாளிப்பதற்கான நீண்டகாலத் திட்டங்கள் போதிய அளவில் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தற்போதும் குழப்பங்களும் குளறுபடிகளும் தொடர்ந்து வருவதாக விமர்சனங்கள் எழுகின்றன.

    இதற்கிடையே, மின்வாரியத் தலைவராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி அருண் ராய் மாற்றப்பட்டு, ஏற்கெனவே மின்வாரியத் தலைவராகப் பணியாற்றிய ராஜேஷ் லக்கானிக்கு மீண்டும் அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

    திமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி மின்சாரத் துறை அமைச்சராக இருந்தபோது, மின்வாரியத் தலைவராக இருந்த ராஜேஷ் லக்கானியின் பெயர் மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு தொடர்பான சர்ச்சையில் அடிபட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய சர்ச்சைகளில் பெயர் இடம்பெற்ற அதிகாரிக்கு மீண்டும் அதே பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

    மின்சார வாரியம் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையுடன் நேரடியாகத் தொடர்புடைய துறையாகும். எனவே, அதன் நிர்வாகத்தை நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்த வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உள்ளது. இதனை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதையும் படிங்க: இடைத்தேர்தல் வெற்றி.. தவெக-வின் 4 மாத நல்லாட்சிக்கு கிடைத்த பரிசு! அமைச்சர் நிர்மல் குமார் பெருமிதம்!

    மேலும் படிங்க
    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின்  கண்டனம்!

    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    இந்தியா
    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    தமிழ்நாடு
    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    தமிழ்நாடு
    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின்  கண்டனம்!

    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    இந்தியா
    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    தமிழ்நாடு
    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    தமிழ்நாடு
    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    தமிழ்நாடு
    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share