தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே எழுத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது. இந்த சோக சம்பவத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் (SETC) பேருந்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.
இதனால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார். பேருந்து சாலையின் நடுத்தடுப்பைத் தாண்டி எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதியது. இந்த மோதலின் விசையால் கார்கள் பலத்த சேதமடைந்தன. இரண்டு கார்களிலும் பயணம் செய்தவர்களே பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். உயிரிழந்த ஒன்பது பேரில் ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் அடங்குவர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா மூன்று லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். பேருந்து டயர் வெடித்து விபத்துக்குள்ளான நிலையில் உரிய முறையில் ஆய்வு செய்து வாகனத்தை இயக்கவில்லை எனக் கூறி சோதனை நடத்த தவறியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கர்நாடகா சொகுசு பேருந்து கோர விபத்து... உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு...!
அஜாக்கிரதையாக பேருந்த இயக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பேருந்து ஓட்டுனர் தாஹா அலி கைது செய்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்தோனேசியா: கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த பஸ்..!! 15 பேர் உயிரிழப்பு..!!