வ்ரும் காலங்களில் எல்லா தேசிய தலைவர்களின் விழாக்களை எல்லா சமுதாய மக்களும் கொண்டாடும் விழாவாக மாற்ற வேண்டும் என்றும் சாதியில் தான் ஒரு மனிதன் பிறக்க முடியும்,சாதியை மாற்றும் வல்லமை யாருக்கும் இல்லை.எல்லா சமுதாய மக்கள் ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என்றும் பசும்பொன்னில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 63 வது குருபூஜையை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,"சத்தியத்தையும், வாழ்வியலையும் தவிர வேறு எதையும் கடைபிடிக்காத சித்த பெருமான் முத்துராமலிங்கத் தேவர்.முத்துராமலிங்க தேவர் ஒரு சமுதாயத் சேர்ந்தவர் என்று நினைப்பது நம்முடைய அறியாமையை தான் காட்டுகிறது.பிற சமுதாயத்திற்கு அவர் எதிராக இருந்திருந்தால் பேரையூர் வேலுச்சாமி வீட்டிற்கு சென்று எத்தனை முறை உணவருந்தி இருப்பார், எத்தனை முறை தங்கியிருப்பார்.
மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த பெருமாளை சட்டமன்ற உறுப்பினராக்கி தன்னோடு பயணிக்க வைத்தவர்.நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தளபதியாகவும் முழு நம்பிக்கை பாத்திரமாகவும் இருந்தவர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பார்வர்டு பிளாக் கட்சி தொடங்கிய போது அவருடைய பயணித்தவர் தேவர்.ஜவஹர்லால் நேரு தேவருக்கு முதலமைச்சர் பதவி தருகிறோம் என்ற சொன்ன போதிலும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்க்கு இணைக்கப்பட்ட அநீதிக்கு ராயல் கிடைக்க வேண்டும் என்றும் அதுவரை போராடுவேன் என்று சொன்னவர்.
இதையும் படிங்க: பசும்பொன்னில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்... தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை..!
\முத்துராமலிங்கத் தேவர்முத்துராமலிங்க தேவரை போற்றுவது என்பது தேசியத்தையும், தெய்வீகத்தையும் போற்று போல்.கடந்த 25 ஆண்டுகளாக அவருடைய நினைவு தினத்தில் நான் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் துணை ஜனாதிபதியான பிறகு உணர்வுப்பூர்வமாக இங்கு வந்துள்ளேன்.வரும் காலங்களில் எல்லா தேசிய தலைவர்களின் விழாக்களை எல்லா சமுதாய மக்களும் கொண்டாடும் விழாவாக மாற்ற வேண்டும்.சாதியில் தான் ஒரு மனிதன் பிறக்க முடியும்.சாதியை மாற்றும் வல்லமை யாருக்கும் இல்லை.எல்லா சமுதாய மக்கள் ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவ முடியும்" என்றார்.
இதையும் படிங்க: கலைஞரை ”ஆஹா.. ஓஹோ...” என புகழ்ந்து தள்ளிய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்... செம குஷியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!