• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தாராபுரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி... அதிகாரிகள் இல்லாமல் காலியாக இருக்கும் கட்டுப்பாட்டு அறை... தவெகவுக்கு ஆதரவாக சதியா?

    தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுவதாக எழுந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Tue, 06 Oct 2026 12:02:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dharapuram control room no staff

    தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொகுதி முழுவதும் 320 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், காலை முதலே சில வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் கட்சியினருக்கு இடையேயான வாக்குவாதங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    வீராச்சிமங்கலத்தில் தவெக – அதிமுகவினர் வாக்குவாதம்: 

    வீராச்சிமங்கலம் பகுதியில் வெளியூரைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் சிலர் வாக்குச்சாவடி அருகே இருந்ததாக கூறி, அதிமுகவினர் அவர்களைச் சுற்றிவளைத்து கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையும் படிங்க: “அடிக்க வர்றாங்க...” - தாராபுரம் எல்லையில் தவெகவினரை கதறவிட்ட திமுக, அதிமுகவினர்... நடந்தது என்ன?

    அந்த பகுதியில் இருந்த வாகனத்தில் தவெக துண்டுப் பிரசுரங்கள் மற்றும் டோக்கன்கள் இருந்ததாக அதிமுகவினர் குற்றம்சாட்டியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்ற நிலையில், அங்கிருந்த சிலர் அங்கிருந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்ததாக புகார்: 

    வீராச்சிமங்கலம் அருகே வெளியூரைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் நான்கு பேர் வாக்காளர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கியதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அதிமுகவினருக்கும் தவெகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வாக்குச்சாவடி அருகே வெளியூரைச் சேர்ந்தவர்கள் இருப்பது தொடர்பாக கிராம மக்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தம்புரட்டிப்பாளையத்தில் பணப்பட்டுவாடா: 

    தாராபுரம் தொகுதிக்குட்பட்ட தம்புரட்டிப்பாளையம் வாக்குச்சாவடி அருகே தவெகவைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், வாக்காளர்களிடம் விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

    இதையடுத்து அங்கிருந்த கிராம மக்கள் சம்பந்தப்பட்டவர்களைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாக்குச்சாவடியில் மின்வெட்டு: 

    வீராச்சிமங்கலம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால் வாக்காளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். வாக்குச்சாவடிக்குள் போதிய வெளிச்சம் இல்லாததால், சில நிமிடங்கள் அதிகாரிகள் செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் வாக்காளர்களை வாக்களிக்க அனுமதித்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு இயந்திரத்திலும் கோளாறு: 

    தாராபுரம் தொகுதியில் உள்ள கொட்டாப்புளிபாளையம் வாக்குச்சாவடி மையத்திலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாதிரி வாக்குப்பதிவு முடிந்த பின்னர் இரண்டு வாக்காளர்கள் வாக்களித்த நிலையில் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாகவும், மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்ட பின்னரும் அதில் தொழில்நுட்பப் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    வெறிச்சோடிய கட்டுப்பாட்டு அறை: 

    தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுவதாக எழுந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தாராபுரம் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை, தற்போதுவரை போதிய ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடிகளில் ஏற்படும் குளறுபடிகள், வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்படும் பழுதுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளிட்டவற்றை உடனடியாக தேர்தல் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், தேர்தல் ஆணையத்தின் சார்பில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

    ஆனால், தாராபுரத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஊழியர்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுவதாகவும், பெயரளவில் ஓரிரு அலுவலர்கள் மட்டும் அவ்வப்போது வந்து செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    இதனிடையே, தாராபுரம் தொகுதி முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக தேர்தல் அதிகாரிகள் செயல்படுவதாகவும், இதுதொடர்பான புகார்களை மறைப்பதற்காகவே அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறையில் இல்லாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    மேலும், தாராபுரம் கட்டுப்பாட்டு அறையில் உள்ள அலுவலர்கள், தேர்தல் தொடர்பான புகார்களைப் பதிவு செய்வதற்கு பதிலாக, மதிய உணவிற்கு என்ன ஏற்பாடு செய்வது, எத்தனை பேருக்கு உணவு சமைத்து கொண்டு வருவது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிவிப்பதிலேயே கவனம் செலுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உரிய எண்ணிக்கையில் அலுவலர்களை பணியமர்த்த வேண்டும் என வாக்காளர்களும் அரசியல் கட்சி பிரமுகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையும் படிங்க: தவெகவை டாரு டாராக கிழித்து தொங்கவிட்ட வீடியோவில் இருப்பது நானா?... வெளியிட்டவர் குறித்து அதிர்ச்சி தகவலை சொன்ன சத்தியபாமா...!

    மேலும் படிங்க
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு
    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share