தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் திமுக கூட்டணியில் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் கட்சிகளில் ஒன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இது தேசிய அளவில் பழமையான கம்யூனிஸ்ட் இயக்கங்களில் ஒன்று; 1925-ஆம் ஆண்டு கான்பூரில் தொடங்கப்பட்டது. தொழிலாளர் உரிமைகள், விவசாயிகளின் நலன், சமூக நீதி, சாதி ஒழிப்பு, மதச்சார்பின்மை போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி இயங்கி வரும் இக்கட்சி, தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.
1980கள் முதல் 1990கள் வரை சில தேர்தல்களில் அதிமுக அணியில் இருந்தாலும், 2000களுக்குப் பிறகு மீண்டும் திமுக அணியுடன் நிலையாக இணைந்துவிட்டது. குறிப்பாக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் திமுக தலைமையில் உள்ள இன்றைய கூட்டணியில் CPI முக்கிய அங்கமாக இருக்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தலில் CPI-க்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதில் 2 இடங்களில் வெற்றி பெற்றது.

அதேபோல் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக அணியுடன் இணைந்து 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றது. இதனிடையே 2020 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தீவிர படுத்தியுள்ளது. கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை குழு அமைத்து தொகுதி பங்கீடு குறித்து பேசிவருகிறது.
இதையும் படிங்க: கப்பல் கனவு கரைஞ்சது..! வலியுடன் வழி தேடுகிறேன்... மாணவி கொலையில் ஆதங்கத்தை கொட்டிய தமிழிசை..!!
இன்று திமுக பேச்சுவார்த்தைக் குழு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மிகத் தீவிரமாக நடந்து வந்த நிலையில் ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. திமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இதையும் படிங்க: அரசியல் நாகரிகமோ, அறமோ அதிமுகவுக்கு இருந்ததே இல்ல... சி.வி. சண்முகத்தை வெளுத்த கனிமொழி..!!