தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் புதிய பிரச்னை எழுந்துள்ளது. திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினரிடம் கடுமையான நிபந்தனை விதிப்பதாக கூட்டணி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
திமுகவுடன் இணைந்து பிரசாரம் செய்ய வரும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தங்கள் கட்சி கொடியை கையில் ஏந்தியபடி வர வேண்டும் என்றும், எத்தனை கொடிகள் தெரிகிறதோ அந்த எண்ணிக்கைக்கு மட்டுமே பணம் வழங்கப்படும் என்றும் திமுக நிர்வாகிகள் கறாராகக் கூறுவதாக கூட்டணி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு கூட்டணி கட்சி நிர்வாகி கூறுகையில், “திமுக கூட்டணியில் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன. ஒவ்வொரு கட்சியும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து, 10 முதல் 20 தொண்டர்களுடன் பிரசாரத்துக்கு வருகின்றனர். திமுகவினருக்கு ஒரு நாளைக்கு 1,000 ரூபாயும், கூட்டணி நிர்வாகிகளுக்கு 500 ரூபாயும் தரப்படுகிறது. ஆனால் எங்களுடன் வரும் தொண்டர்களுக்கு பணம் தர மறுக்கின்றனர்.
இதையும் படிங்க: திமுக கூட்டணிக்கு Goodbye சொல்லும் வேல்முருகன்?! தமிழக வாழ்வுரிமை கட்சி டிமாண்ட்! மு.க.ஸ்டாலின் ஆலோசனை?!

வேட்பாளரிடம் புகார் அளித்தால், ‘வார்டு செயலர், பகுதி செயலர்களைப் பாருங்கள்’ என சொல்கின்றனர். அவர்களிடம் சென்றால், ‘உங்கள் கட்சிக்கு இந்தப் பகுதியில் தொண்டர்களே இல்லை. 10 பேர், 20 பேர் என்று சொல்லி பணம் கேட்கிறீர்கள். உங்கள் கொடியை ஏந்தி வருபவர்களை மட்டுமே எண்ணி பணம் தருவோம்’ என கறாராகப் பதில் அளிக்கின்றனர்.
இந்த முடிவு கூட்டணி கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல கூட்டணி கட்சிகள் இந்த விவகாரத்தை தங்கள் கட்சி தலைமைக்கு தெரிவித்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தேர்தல் பிரசாரத்தில் கூட்டணி ஒற்றுமை முக்கியம் என்ற நிலையில், இத்தகைய கறார் போக்கு கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. திமுகவின் இந்த அணுகுமுறை, சிறிய கூட்டணி கட்சிகளை மேலும் தனிமைப்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
இந்த சர்ச்சை தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி கட்சிகளிடையே எழும் இத்தகைய அதிருப்தி, திமுகவுக்கு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: என்காசு ரூ.3 லட்சத்தை திருப்பி கொடுங்கண்ணே!! செந்தில்பாலாஜி கையை பிடித்து ரகளை! கோவில் நிர்வாகி சஸ்பெண்ட்!!