தமிழ்நாட்டின் 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் கல்வி , பொருளாதாரம், வேலை வாய்ப்பு, ஏற்றுமதி, சமூகநீதி, மகளிர் கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டில் சமூகநீதி ஆட்சியை நடத்தியவர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சி இந்தியா முழுவதும் ஒலிக்க தொடங்கவே, தாங்க முடியாத மத்திய பாஜக அரசு, RSS மூலம் சதித்திட்டத்தினை துபாயில் அரங்கேற்றி அதன்மூலம் தமிழ்நாட்டில் உருவான தவெக கட்சி பாஜக துணையோடு பல தில்லு முல்லுகளும், பொய் பிரச்சாரங்களும் இணையம் மூலம் ரீல்ஸாக வெளியிட்டு முதல்வர் விஜய் ஆட்சிக்கு வந்ததாக விமர்சனம் செய்து உள்ளார்

ஆட்சிக்கு வந்த நாள் முதல், RSS-பாஜக சித்தாந்தங்களான இந்தி,சமஸ்கிருதம் தங்கு தடையின்றி படிக்க 1000 CBSE பள்ளிகளுக்கு அனுமதி, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-வது இடம், மாநில கனிம உரிமை ரத்து, கர்நாடகாவுக்கு ஆதரவாக காவிரி-மேகதாது பிரச்சினையில் கள்ள மெளனம், ஆந்திரா-கர்நாடக தொழில் வளர்ச்சிக்கு பரந்தூர்-ஓசூர் விமான நிலையம் முடக்கம் இவ்வாறு தமிழ்நாட்டு மக்களுக்கு நேரடியாக துரோகம் செய்து பாஜக ஆட்சி நடத்துவதாக கூறி உள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று தந்தவரே கலைஞர் தான்..! கனிமொழி MP சுதந்திர தின வாழ்த்து..!
டப்பிங் முதல்வர் என்று முதலமைச்சர் விஜயையும், அவரிடம் அமைச்சராக இருக்கும் அரைக்கால் காக்கி டவுசர் அமைச்சர் நிர்மல் குமார் என்றும் கூறினார். திமுக-பாஜக நேரடி கூட்டணி என்று விமர்சிக்க எந்த யோக்கியதையும் இல்லை என்றார்.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் மீனவர்கள் கைது..!! கடிதம் எழுதுவது மட்டும் போதாது..! மீனவர்கள் கைது விவகாரத்தில் உதயநிதி ஆவேசம்..!