பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருமளவு அதிகரித்து இருப்பது பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. வயது வித்தியாசம் பாராமல் நடக்கும் பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. இரண்டு மாத குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் அதனால் தான் பல குற்றங்கள் நடைபெறுவதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக திமுக நிர்வாகிகள் என்ற போர்வையில் குற்றங்களை நிகழ்த்துவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக நிர்வாகி ஒருவர் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை தியாகராய நகர் 139 வது வட்ட திமுக துணை அமைப்பாளராகவும் வழக்கறிஞராகவும் இருப்பவர் பரத். இவர் சென்னை திருமங்கலம் பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டுள்ளது. நடந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் கூறிய நிலையில் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு கொடுமை.. 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..! கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது..!!
இதை அடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் திமுக நிர்வாகி பரத்தை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 13 வயது சிறுமி திமுக நிர்வாகியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: எனக்கு வேற வழி தெரியலம்மா... மகளின் தலையில் சிசிடிவி வைத்த தந்தை... வைரலாகும் வீடியோ..!!