அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழக அரசியலில் நீண்டகால அனுபவம் கொண்ட மூத்த தலைவர்களில் ஒருவர். அவரது அரசியல் பயணம் 1970களில் தொடங்கியது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த அவர், கட்சியின் இளைஞர் அணியில் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக அறியப்படும் இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் 1999 முதல் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் பின்னணியுடன், உள்ளூர் அரசியலில் இருந்து மாநில அளவில் உயர்ந்துள்ளார்.
அவரது தேர்தல் அனுபவம் மிகவும் விரிவானது. 2006-2011 காலகட்டத்தில் சென்னை மாநகர மேயராகப் பதவி வகித்தார். இதைத் தொடர்ந்து 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மா. சுப்பிரமணியன் சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளராகக் களமிறங்கினார். 2021 சட்டமன்றத் தேர்தலில் மா. சுப்பிரமணியன் மீண்டும் சைதாப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டார்.

இம்முறை அதிமுகவின் முன்னாள் மேயர் சைதை சா. துரைசாமியுடன் நேரடி மோதல் ஏற்பட்டது. இரு முன்னாள் மேயர்களுக்கும் இடையிலான இந்தப் போட்டி பெரும் கவனத்தை ஈர்த்தது. மா. சுப்பிரமணியன் சுமார் 80,194 வாக்குகள் பெற்று, எதிராளியை விட 29,408 வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றி பெற்றார்.
இதையும் படிங்க: கோயில் நகைகளில் கை வைத்த திமுக... “ஆண்டவன் சரியான தண்டனை கொடுப்பான்”... சாபம் விட்ட இபிஎஸ்...!
2026 சட்டமன்றத் தேர்தலிலும் மா. சுப்பிரமணியன் சைதாப்பேட்டை தொகுதியில் களம் காண்கிறார். இதனிடையே, சைதாப்பேட்டை தொகுதியில் தங்கள் பிரச்சாரம் தொடங்கி இருப்பதாக அமைச்சரும் அந்த தொகுதி வேட்பாளருமான மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். தொடர்ந்து 14 நாட்கள் பரப்புரை நடத்த இருப்பதாக கூறினார். காலை 7 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12:00 மணி வரைக்கும் மற்றும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரைக்கும் என பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த தேர்தலில் திமுகவின் முதல் வெற்றி தொகுதியாக தைசாப்பேட்டை அமையும் எனவும் திட்டவட்டமாக கூறினார்.
இதையும் படிங்க: "ஸ்டாலின் தொடரட்டும்"... "தமிழ்நாடு வெல்லட்டும்"... திமுகவின் பிரச்சார பாடல் வெளியீடு..!!