பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். 700க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து போராடிவரும் செவிலியர்களுடன் அமைச்சர் மா. சுப்ரமணியன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, அமைச்சர் சுப்பிரமணியன் மிரட்டும் துணியில் பேசுவதாக செவிலியர் சங்கச் செயலாளர் குற்றம் சாட்டினார்.
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளின்படி சமவேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அறவழியில் போராடி வரும் செவிலியர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவது, ஊரப்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைப்பது என அலை கழிக்கும் அராஜக போக்கை திமுக கையாளுவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
செவிலியர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்துள்ள அதிமுக இதுவா மக்களாட்சி என்று கேள்வி எழுப்பி உள்ளது. தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும், பணி நிரந்தரத்திற்காகவும், நீங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அறவழியில் போராடும் செவிலியர்களை விடியா திமுக அரசு கையாளும் விதம் இதுதானா இன்று சரமாரியாக சாடியுள்ளது.
இதையும் படிங்க: ஸ்டாலின் தான் வந்தாரு அல்வா உருட்டி தந்தாரு... இது TEASER தான்...கதறுங்க..! வெச்சு செய்த அதிமுக...!

கழிப்பறையை உபயோகப்படுத்த வந்த செவிலியர்களை அதுவும் பெண்கள் என்றும் கூட பாராமல் கைது செய்வது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும் குற்றம் சாட்டியுள்ளது. கொரோனா காலத்தில் உயிரைப் பணையம் வைத்துப் பணியாற்றிய தேவதைகளை இன்று குற்றவாளிகளைப் போல நடத்துவது எந்த விதத்தில் நியாயம் என்றும் அதிமுக கேள்வி எழுப்பி இருக்கிறது.
கொடுங்கோல் ஆட்சியில் இருக்கும் மன்னர்கள் கூட இப்படி இருக்க மாட்டாங்க என்று குமுறும் பெண்களின் கதறல்கள் vibe செய்து கொண்டிருக்கும் போலி அப்பாவுக்கு கேட்கவில்லையா என்றும் அதிகார பலத்தைக் காட்டி போராட்டங்களை ஒடுக்க முயலும் விடியா திமுக அரசுக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கும் மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தவெகவில் இணையும் செங்கோட்டையன் ஆதரவு MLA? சட்டென கொடுத்த ரியாக்ஷன்..!