சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மிசா குறித்து பேச முதலமைச்சரின் விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு சட்டப்பேரவையை திரைப்பட அரங்கமாக மாற்றிய பெருமை முதலமைச்சர் விஜய் தான் சேரும் என்று தெரிவித்தார்.
13 எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பு என் நிலையில் முதல்வர் விஜய் பதிலளிக்கவில்லை என்றும் முதலமைச்சரின் பதிலளிப்பதே மரபு எனவும் தெரிவித்தார். பெண்கள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்கள் கூட மிசாவில் கைது செய்யப்படுவர் என்று அமைச்சர் நிர்மல் குமார் கூறுவதாகவும் மிசா பற்றி பேசுவதற்கு முதலமைச்சரின் விஜய்க்கும் அமைச்சர் நிர்மல் குமாருக்கும் எந்த தகுதியும் இல்லை என்று தெரிவித்தார்.

அது மட்டுமல்லாது சட்டத்துறை அமைச்சரை பைத்தியம் என்று குறிப்பிட்டு பரந்தாமன் சர்ச்சை கருத்தை வெளியிட்டார். ஆதாரத்தை கேட்டால் நான் சும்மாவே காட்டுவேன், இப்ப காட்டு காட்டுனு காட்டுவேன் என்ற முதல்வர் வசனம் பேசுவதாக விமர்சனம் செய்தார். மிசாவில் கைதானோர் தாக்குதலுக்கு உள்ளானது குறித்த இஸ்மாயில் கமிஷன் பற்றி தெரியுமா என்று கேட்டார்.
இதையும் படிங்க: குண்டு கட்டாக வெளியேற்றம்... பேரவையில் பரபரப்பு.! திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலினுடன் சந்திப்பு..!!
மேலும் மிசாவில் அரசியல் கைதிகள் கொடுமைக்குள்ளானது பற்றி ஆணை அறிக்கையில் தெளிவாக உள்ளது எனவும் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாத முதல்வர் விஜய்யை தொடை நடுங்கி என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். முதல்வர் குறித்து அநாகரிகமாக விமர்சித்த பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்க பயமா என்றும் கேட்டார்.
இதையும் படிங்க: MLA ஜெயக்குமார் வெற்றிக்கு எதிர்ப்பு..! தோப்பு வெங்கடாசலம் மனு நிராகரிப்பு.! நீதிமன்றம் உத்தரவு.!!