2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க திமுகவின் தேர்தல் இயந்திரம் வேகமெடுத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் வாரம் ஒருமுறை சர்வேக்கள் நடத்தி, மக்களின் மனசு என்ன சொல்கிறது, திமுக வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதை கண்ணாடி போல பார்த்து கொண்டிருக்கிறது. இந்த சர்வேக்கள் சர்வதேச ரீசர்ச் நிறுவனங்களின் உதவியுடன் நடக்கிறதாம்.
அதாவது டெல்லி, மும்பை, வாஷிங்டன் போன்ற இடங்களில் இருந்து சார்ட்டர்ட் பிளேன்ல வந்து களமிறங்கி, துல்லியமான டேட்டா கொடுக்கிறார்கள். இதன் மூலம் ஸ்டாலின் தலைமையில் திமுக, வாக்காளர்களின் மனசு மாற்றத்தை நிகழ்நேரத்தில் கேச்ச் செய்து, பிரச்சாரத்தை ஃபிக்ஸ் பண்ணிட்டு வருகிறது.
இந்த வாராந்திர சர்வேக்கள் சாதி, பாலினம், தொழில், பிராந்தியம் என பல வகையில் மக்களை பிரித்து ஆய்வு செய்கிறது. கிராமத்து தொழிலாளர்கள் என்ன சொல்றாங்க, நகர இளைஞர்கள் எப்படி ரியாக்ட் ஆகுறாங்க, பெண்கள் வாக்காளர்கள் என்ன எதிர்பார்க்கிறாங்க, நடுத்தர குடும்பங்கள் அரசியல் நிகழ்வுகளுக்கு என்ன பதில் கொடுக்கிறாங்க என்பதை டீடெயிலா கேட்டு, ரிப்போர்ட் தயார் பண்ணுகிறது.
இதையும் படிங்க: கொங்குக்கு செங்கோட்டையன்! தென்மாவட்டங்களுக்கு ஓபிஎஸ், தினகரன்! டெல்டாவுக்கு வைத்திலிங்கம்! விஜய் மாஸ்டர் ப்ளான்!
இதுல முக்கியமா கவனம் செலுத்துறது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK). விஜய் கட்சி திமுகவின் பழைய வாக்கு வங்கியை எத்தனை பேர்செண்ட் பாதிக்கும், முக்கிய தொகுதிகள்ல TVK சவால் ஆகுமா என்பதை டிராக் பண்ணிட்டு இருக்கிறது. சமீபத்திய சர்வேல்ல TVK-க்கு 12% டிரஸ்ட் வோட் இருக்கிறதா, 23% வரை போகுமா என்பதையும், விஜய்யின் அரசியல் எழுச்சி மக்கள் உணர்வுகளை எப்படி ஈர்க்கிறது என்பதையும் அளக்கிறது.

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் இதுல சிறப்பா இருக்கு. அந்த சம்பவத்துல 41 பேர் இறந்தது, 80-120 பேர் காயமடைந்தது – இது திமுகவுக்கு பெரிய ஷாக். கரூர் மற்றும் சுற்று மாவட்ட வாக்காளர்களிடம் தனி சர்வே செய்து, உள்ளூர் பிரச்சினைகள் தேர்தலுக்கு எப்படி பாதிக்கும், அந்த டிராமா விஜய்யை எப்படி ஸ்ட்ராங்க் ஆக்கியிருக்கு என்பதை அறிந்து கொள்கிறது. இந்த டேட்டாவை வைச்சு திமுக, பிரச்சார ஸ்டோரி மாத்தி, திட்டங்கள் ஃபைனல் பண்ணிட்டு வருகிறது. வேட்பாளர் யாரு, வாக்குச் சாவடி ஸ்ட்ராடஜி என்ன, பிரச்சினைகளுக்கு ப்ரையாரிட்டி என்ன – எல்லாத்தையும் இந்த சர்வே ரிப்போர்ட் அடிப்படையில தீர்மானிக்கிறது.
இந்த வாராந்திர ரிப்போர்ட் நேரா முதல்வர் ஸ்டாலினுக்கு போகிறது. வாரம் வாரம் இதை படிச்சு, கட்சி தலைவர்களுக்கு ஆலோசனை கொடுக்கிறாராம் ஸ்டாலின். 2026-ல் போட்டியாளர்களை விட ஒருபடி மேல இருக்க, கள மாற்றங்களுக்கு வேகமா ரியாக்ட் பண்ண, வாக்குறுதிகளை டேட்டா அடிப்படையில கொடுக்க – இதுதான் திமுகவின் பெரிய கேல். சர்வதேச நிறுவனங்கள் உதவியால துல்லியமான டேட்டா கிடைக்கிறதால, திமுக இப்போதே தேர்தல் போல தயார் நிலையில இருக்கு.
இதையும் படிங்க: செங்கோட்டையன் வெறும் ட்ரெயிலர் தான்! ஓபிஎஸ்., டிடிவி, சசிகலா வரிசைகட்டும் தலைவர்கள்! 2026-ல் திமுகவுக்கு செக்!