அட்டாரி - வாகா எல்லை வழியாக 786 பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. இவ்விஷயத்தில் ராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை வழங்கி உள்ளது. எனவே, எப்போது வேண்டுமானாலும் ராணுவம் தனது பதிலடி நடவடிக்கையை தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்தியா அடுத்த 24-36 மணி நேரத்தில் ராணுவ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக “நம்பகமான உளவுத்துறை” தகவல்களை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், ஏப்ரல் 24 தொடங்கி ஆறு நாட்களுக்குள் 786 பாகிஸ்தானியர்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேபோல பாகிஸ்தானிலிருந்து அட்டாரி-வாகா எல்லை வழியாக மொத்தம் 1376 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.. ரகசிய சிகிச்சை என தகவல்?

மேலும் அவர், “பாகிஸ்தானுக்கு நேரடி விமானம் இல்லாததால், துபாய் அல்லது பிற வழித்தடங்கள் வழியாக பலர் விமானம் மூலம் வெளியேறியுள்ளனர். மாநில காவல்துறை மற்றும் பிற மத்திய நிறுவனங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டினரை அடையாளம் கண்டு வருவதால், அதிகமான பாகிஸ்தான் நாட்டினர் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திருமணம் மூலம் இந்தியாவுக்குள் வந்த 5 லட்சம் பாக். பெண்கள்.. பாஜக எம்.பி. வெளியிட்ட திடுக் தகவல்.!