காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையிலான பிரச்சனை பல தசாப்தங்களாக தொடர்ந்து வரும் ஒன்று. இந்தப் பிரச்சனையின் சமீபத்திய மற்றும் முக்கிய அம்சமாக உருவெடுத்துள்ளது மேகதாது அணைத் திட்டம். கர்நாடக அரசு காவிரி ஆற்றின் மேல் பகுதியில் மேகதாது என்ற இடத்தில் ஒரு பெரிய தடுப்பணை கட்ட முயற்சி செய்து வருவதை தமிழ்நாடு உரிமை மீறல் என்று கருதி கடுமையாக எதிர்க்கிறது. இந்தத் திட்டம் காவிரி நீர் பங்கீடு தீர்ப்புகளை மீறுவதாகவும், தமிழ்நாட்டின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேகதாது இடம் கர்நாடகாவின் ராமநகர் மாவட்டத்தில், பெங்களூரிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில், காவிரியும் அர்க்காவதி ஆறும் இணையும் சங்கமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் எல்லைக்கு மிக அருகில் உள்ளது. கர்நாடக அரசு இங்கு சுமார் 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையை கட்டத் திட்டமிட்டுள்ளது.

இதன் முக்கிய நோக்கங்கள் பெங்களூருக்கு குடிநீர் வழங்குதல், மின்சார உற்பத்தி மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு ஆகும். திட்டத்தின் மதிப்பு சுமார் 9,000 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் மேகதாது விவகாரம் தொடர்பாக தனி தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இதையும் படிங்க: LIVE டெலிகாஸ்ட் ஆகுது..!! "கண்ணியமா நடந்துக்கோங்க"...! பேரவையின் 3 ஆம் நாள் அமர்வில் கடும் அமளி..!!
இந்த நிலையில் மூன்றாம் நாள் பேரவையின் அமர்வில் உரிமை விதிமீறல் தொடர்பாக விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் நேரத்தில் பேசலாம் என்று சபாநாயகர் கூறியும் சமரசம் செய்து கொள்ளாத அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதையும் படிங்க: செந்தில்பாலாஜிக்கு தூது விட்ட எடப்பாடி பழனிசாமி! மீண்டும் அதிமுகவுக்கு அழைப்பு?! வேலுமணிக்கு செக்