2026 சட்டமன்ற தேர்தலை பாஜக கூட்டணியுடன் சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். கட்சியின் அமைப்புகளை வலுப்படுத்தும் விதமாக ஆலோசனைக் கூட்டங்கள் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து,
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். கோயம்புத்தூரில் ஜூலை 7ஆம் தேதி தொடங்கிய சுற்றுப்பயணத்தை தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து உரை நிகழ்த்துவது உடன் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.

அப்போது, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தால் என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் உறுதியளித்து வருகிறார். 2026 இல் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். கூட்டணியை பலப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். செயற்குழு கூட்டங்கள், பொதுக்குழு கூட்டங்கள் ஆகியவற்றை நடத்தி கட்சியை பூத் லெவல்களில் இருந்து மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இதையும் படிங்க: ஓபிஎஸ்- க்கு எடப்பாடியார் பதில் கொடுப்பார்... வைத்திலிங்கம் உதிர்ந்த செங்கல்... ஜெயக்குமார் பேட்டி...!
இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி முதல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 28ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு அவ சுற்றுப்பயணம் நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் ஆட்சி அமைப்போம்... எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய EPS உறுதிமொழி...!