ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோரை திமுக அரசுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரப் பணிகளில் ஃபெயிலியர் மாடல் திமுக அரசின் ஈடுபடுத்துவதாக அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தங்கள் ஆட்சி அமைந்த உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட திட்ட அலுவலர்கள் ஆணைபடி, மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில் பணிபுரியும், 'ஊராட்சி செயலாளர்கள்' மற்றும் '125 நாள் வேலை உறுதித் திட்டத்தில்' பணிபுரியும் 'பணித்தளப் பொறுப்பாளர்கள்' மற்றும் 'பணியாளர்கள்' வீடு வீடாகச் சென்று, திமுக ஆட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவது சட்ட விரோதமானது அதிமுக தெரிவித்துள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள் திமுக அரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடும் ஊராட்சி செயலாளர்கள், 125 நாள் வேலை உறுதித் திட்ட பணித்தளப் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. மேலும், கழக ஆட்சி அமைந்தவுடன் சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் 2.0 ஆட்சியா? அவரு 23ஆம் புலிகேசி..! காதில் பூ சுற்றும் ஸ்டாலின்... EPS விமர்சனம்..!
கிராமப் பஞ்சாயத்தின் வளர்ச்சிக்காக பணிபுரியும் கிராம செயலாளர்கள் மற்றும் கிராமங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் பணித்தளப் பொறுப்பாளர்கள் மற்றும் பணியாளர்களை, திமுக அரசு தங்களது சுய லாபத்திற்காக, தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபடுத்துவதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டடம் தெரிவித்தார். தேர்தல் பிரச்சார வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினின் ஃபெயிலியர் மாடல் விடியா திமுக அரசை வலியுறுத்துவதாக காட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் எச்.ராஜா..!! நேரில் சென்று நலம் விசாரித்தார் எடப்பாடி பழனிசாமி..!!