2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக சட்டமன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. தமிழக சட்டமன்றத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்குச் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை மண்டபத்தில் தொடங்கி நடைபெற்றது.
தமிழ்த்தாய் வாழ்த்து உடன் சட்டப்பேரவை கூடிய நிலையில் நான்காவது ஆண்டாக ஆளுநர் உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்தார். அவரது உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் ரவி வெளியேறிய உடனேயே அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.

இதனிடையே, சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில் சட்டசபை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆவணமாகவே உள்ளது என்று தெரிவித்தார். பெரும்பாலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறியுள்ளார். போக்சோ சட்டத்தில் அதிக வழக்குகள் பதிவாகி இருப்பதாக ஆளுநர் கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார். ஆளுநரின் விளக்க அறிக்கை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஜி ராம் ஜி மூலம் ரூ. 5000 கோடி கூடுதல் செலவு... ஆளுநர் உரையை வாசித்த சபாநாயகர் அப்பாவு..!
இந்தியாவின் தற்கொலை தலைநகரமாக தமிழ்நாடு மாறி இருப்பதாக ஆளுநர் கூறியுள்ளார் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் உயர்கல்வி பயில்பவர்கள் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் குறைந்திருப்பதை ஆளுநர் குறிப்பிட்டுள்ளார் என்றும் தெரிவித்தார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: தலை விரித்து ஆடும் போதை... ஒதுங்கி நிற்கும் மாநில அரசு... வெளுத்து வாங்கிய TTV..!