ராணிப்பேட்டை மாவட்டத்தில் மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற பயணத்தை மேற்கொள்ள எடப்பாடி பழனிச்சாமி மக்களிடையே உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை. கொலை நிறைந்த மாநிலமாக உள்ளது. கடந்த 7 மாதங்களில் 850 கொலைகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 60 கொலைகள் நடந்துள்ளன. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தான், அனைத்து துறையும் சிறந்து விளங்கும்.
திமுக தமிழகத்தில் தேய்ந்து கொண்டு செல்கிறது. எனவே வீடு வீடாக சென்று கெஞ்சி பிச்சை எடுத்து வருகின்றனர். ஓரணியில் ஸ்டாலின் திட்டத்தை விமர்சித்த எடப்பாடி, தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை. கொலை நிறைந்த மாநிலமாக உள்ளது. கடந்த 7 மாதங்களில் 850 கொலைகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 60 கொலைகள் நடந்துள்ளன.
சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தான், அனைத்து துறையும் சிறந்து விளங்கும். பொம்மை முதல்வரால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் 2026 தேர்தல். குடும்ப ஆட்சி வேண்டுமா? வாரிசு அரசியல் வேண்டுமா?
எடப்பாடி கேள்வி.
இதையும் படிங்க: எங்கள பார்த்தா எப்படி தெரியுது? இபிஎஸ் மேல நடவடிக்கை எடுங்க! அவசர ஊர்தி தொழிலாளர்கள் புகார்..!
உதயநிதிக்கு துணைமுதல்வராக்கியது தான் 55 மாதங்களில் திமுக செய்த சாதனை. அதிமுக ஆட்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தை உருவாக்கி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளோம். திமுகவுக்கு எப்போது குடும்பம் குறித்த சிந்தனை தான். முதல்வர் அமைச்சருடன் பேசுகையில் மகன் நடித்த படத்தில் பணம் வருகிறதா என கேட்கிறார். குடும்பத்தை மட்டுமே நினைக்கிறார். மக்களை நினைப்பதில்லை.
2021 தேர்தலில் 525 அறிவிப்புகளில் 98% நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். மூட்டை மூட்டையாக பொய் சொல்கிறார். தேர்தல் வாக்குறுதிகளை பட்டியலிட்டு செய்தார்களா என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினார். உதயநிதி நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் தெரியும் என்றார். அதை ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மட்டுமாவது சொல்லி விட்டு போங்கள்.
திமுக பொய் பேசி ஆட்சிக்கு வந்தவர்கள், அவர்களின் முதலீடே பொய் தான். பொய் பேசி ஆட்சிக்கு வந்தது திமுக அரசு. அதிமுக அரசு அறிவிக்காத பல திட்டங்களை செயல்படுத்தியது. காழ்ப்புணர்ச்சியோடு லேப்டாப் திட்டத்தை நிறுத்தி விட்டார்கள், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் லேப்டாப் வழங்கப்படும்
இதையும் படிங்க: அது FAKE! சீல் கூட இல்ல.. இபிஎஸ்ஐ கண்டித்து வெளியானது போலி அறிக்கை என ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சங்கம் விளக்கம்..!