மதுரையில் அதிமுக மேற்கு தொகுதி வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். திமுக பிரச்சார கூட்டத்தில் உங்களுக்கு எல்லாம் 5,000 ரூபாய் வந்து விட்டதா? என முதல்வர் ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு "மகளிருக்கு 5,000 ரூபாய் வழங்கியது குறித்து முதல்வர் பேசக்கூடாது, 5,000 ரூபாய் அரசு கொடுக்கின்ற பணம், அதை தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பேசக்கூடாது, முதல்வர் பேசியது தவறென்றால் தவறு தான்" என கூறினார்.
அதிமுக - பாஜக கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து விமர்சனம் செய்து பேசி வருவது குறித்த கேள்விக்கு, "அதிமுக - பாஜக கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்வது தேர்தல் தோல்வி பயத்தை காட்டுகிறது, என்னை அடித்து விடுவாயா? கொப்பன் மவனே என்பது போல எதையாவது ஒற்றை பேசுவதற்காக முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார், அதிமுக - பாஜக கூட்டணி மக்கள் மத்தியில் நல்ல கூட்டணி எனவும், வெற்றி பெறும் கூட்டணி எனவும், உறுதியாகி உள்ளது, அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த கட்சிகள் வந்துள்ளது, எத்தனை கட்சிகள் வந்துள்ளன என மக்கள் பார்க்கவில்லை, பாஜக அமைச்சரவையில் அங்கம் வகித்த போது திமுகவுக்கு பாஜக இனித்ததா?, பாஜக ஆட்சியில் இந்தியா வளர்ந்துள்ளது, மோடி ஜி செல்வாக்கு பெற்றவராக உள்ளார்.
மத்திய அரசு குறித்து ஒரு ஊழல் புகார் கூட சொல்ல முடியாத அளவிற்கு பாஜக அரசு செயல்படுகிறது, பாஜக மதவாத கட்சி, தமிழ்நாட்டையே மாற்றி விடும் என ஸ்டாலின் சும்மா பேசி வருகிறார், தேர்தல் நெருங்குவதால் ஸ்டாலின் ஜோக் மேலே ஜோக்காக அடித்து வருகிறார்" என கூறினார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் 22 இடங்களா..?? விஜய் பிரசாரத்திற்கு NO பர்மிஷன்..!! 8 இடங்களை டிக் அடிக்க அறிவுறுத்தல்..!!
நடிகர் விஜய்க்கு வரும் கூட்டம் வாக்காக மாறாது என சொல்லி உள்ளீர்கள், ஆனால், அதிமுக கூட்டணியில் நடிகர் சுந்தர்.சி தேர்தலில் போட்டியிடுகிறாரா? என்ற கேள்விக்கு "சுந்தர்.சி-க்கு பேஸ் வேளியூ உள்ளது, அவரை நடிகர், இயக்குனர், குஷ்பூவின் கணவர் என்பதை விட அவர் ஒரு வேட்பாளர், நடிகை குஷ்பூவுக்கு கோவில் கட்டியது தமிழ்நாடு, ஆனால், தேர்தலில் குஷ்பூ தோல்வி அடைந்து விட்டார், தவெக தலைவர் விஜய்க்கு எம்.ஜி.ஆர் யாரென்பது தேர்தலுக்கு பின்னர் தெரிய வரும், எம்.ஜி.ஆர் என்பவர் எம்.ஜி.ஆர் தான் என்பது தம்பி விஜய்க்கு தேர்தலுக்கு பின் அறிவார்" எனக்கூறினார்.
இதையும் படிங்க: எந்த கொம்பன் வந்தாலும்.. விஜய் ஆட்சியில் அமர்வதை தடுக்க முடியாது..!! அடித்துக்கூறிய செங்கோட்டையன்..!!