ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்னாள் அமைச்சரும், திமுக ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளருமான, தோப்பு வெங்கடாசலம் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தோப்பு வெங்கடாசலம், செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், செங்கோட்டையன் அதிமுகவில் எம்ஜிஆர் காலம் முதல் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்தவர். 1977 முதல் தொடர்ந்து 9 முறை எம்எல்ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர்.
மூத்த அரசியல்வாதி அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இன்றைக்கு தன்னை செங்கோட்டையன் தவெக.வில் இணைத்துக் கொண்டுள்ளார் . ஒரு கட்சியில் இணைவது அவருடைய சொந்த முடிவு, அதில் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை, அது அவருடைய தனிப்பட்ட முடிவு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை சட்டை பையில் வைத்துக்கொண்டு அங்கு சென்று இணைந்திருக்கிறார். அது பேசு பொருளாகி இருக்கிறது. அதற்கும் ஒரு விளக்கம் தந்திருக்கிறார். செங்கோட்டையன் எங்கிருந்தாலும் வாழ்க என்றார்.
இதையும் படிங்க: "இந்த புத்தி நேற்று வரைக்கும் எங்க போச்சு...." - வார்த்தையை விட்ட செங்கோட்டையனை வச்சி செய்த அமைச்சர் ரகுபதி...!
யார் எங்கிருந்தாலும் எங்கு சென்றாலும் திமுக எப்போதும் அச்சப்படாது. 2026 தேர்தலில் திமுக அறுதி பெரும்பான்மையோடு மீண்டும் ஆட்சி அமைக்கும் தமிழகத்தின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் இரண்டாவது முறையாக பொறுப்பேற்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் வருகை தந்த போது ஏராளமான மக்கள் கூடி நின்று வரவேற்றார்கள். அதில் பெண்கள் மாணவர்கள் அதிக அளவு ஆர்வத்தோடு வந்து வழிநெடுகிலும் திரண்டு வந்து வரவேற்பை தெரிவித்தார்கள். இதுவே இந்த ஆட்சியின் மீதான மக்கள் நம்பிக்கைக்கு சான்று.
அதிமுகவை ஒன்றிணைப்பதாக சொல்லியவர் இன்று வேறு கட்சிக்கு சென்றுள்ளார். அதிமுகவை ஒன்றிணைக்க அந்த ஆண்டவனே வந்தாலும் முடியாது என்ற பொதுவான கொள்கையோடு இந்த முயற்சியை எடுப்பது விழலுக்கு இறைத்த நீராக இருக்கும் என்பதால் அவர் அந்த முயற்சியை கைவிட்டு அங்கு சென்று இருப்பார் என நினைக்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: தவெகவுடன் இணைவு..!! செங்கோட்டையனின் அடுத்தடுத்த மூவ்..!! அரசியல் அரங்கில் புதிய திருப்பம்..!!