மேற்கு வங்காளத்தில் இன்று இரண்டாம் மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன், ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்துக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகத் தொடங்க உள்ளன. இந்தத் தேர்தல்கள் இந்திய அரசியலில் முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகின்றன.
வாக்கு எண்ணிக்கை வரும் மே 4ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மக்களிடையே எதிர்பார்ப்பும் பரபரப்பும் உச்சத்தில் உள்ளது.இந்த முறை அசாம், கேரளா, புதுச்சேரி ஆகியவை ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு கண்டன. தமிழ்நாடு ஏப்ரல் 23ஆம் தேதியும், மேற்கு வங்காளம் ஏப்ரல் 23 மற்றும் 29ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

மொத்தம் 824 சட்டமன்ற உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் இது. இதில் மேற்கு வங்காளத்தின் 294 தொகுதிகள் மிகப் பெரிய அளவில் கவனம் பெறுகின்றன. முதல் கட்டத்தில் ஏற்கெனவே 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது சுமார் 93 சதவீத வாக்காளர்கள் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: லயோலா வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்தது இதுதான்..! வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை...! எச்சரிக்கை..!
இன்று இரண்டாம் கட்டத்தில் 142 தொகுதிகள், அதில் முதலமைச்சர் மமதா பானர்ஜியின் பலமான தொகுதியான பாபனிபூர் உள்ளிட்டவை அடங்கும்.தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, ஏப்ரல் 9ஆம் தேதி காலை 7 மணி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 6.30 மணி வரை exit poll முடிவுகளை வெளியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடை நீங்கியவுடன், பிரபல செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களில் கருத்துக் கணிப்பு முடிவுகள் ஒளிபரப்பாகத் தொடங்கும்.
இதையும் படிங்க: NO லீவ்..! காவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு..! தமிழக டிஜிபி கறார்..!