எடப்பாடி பழனிச்சாமியின் கட்சியை விட்டு நீக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வாரம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். முதலில் அவரது கட்சி பதவிகளை பறித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சமீபத்தில் நடைபெற்ற தேவர் ஜெயந்தியின் போது டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோருடன் இணைந்து அந்நிகழ்ச்சியில் பங்கேற்றதால் கட்சிக்கு கலங்கம் உள்ள இருப்பதாக கூறி செங்கோட்டையனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார்.
அதன் தொடர்ச்சியாக இன்று காலை செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த அதிமுக முன்னாள் எம்.பி சத்தியபாமா உள்ளிட்ட 12 பேரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று கட்சியை விட்டு நீக்கியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் எம்.பி சத்தியபாமா கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. சாதாரண உறுப்பினராக தொண்டராக இருந்து பணியாற்றி வந்தேன். உழைப்பவர்களுக்கு வாய்ப்பை வழங்கும் அடிப்படையில் கோபி நகர் மன்ற உறுப்பினர் துணை தலைவர் பதவிகளை ஜெ வழங்கினார். 2007 இல் மாவட்ட மகளிர் அணி செயலாளர் பதவி வழங்கினார். 2014 நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கினார் ஜெயலலிதா. அவர் வழங்கிய வாய்ப்பை இன்றும் நினைத்து பார்க்கின்றேன் என்றார்.
இதையும் படிங்க: இப்படியே போனா முழுநிலவு அமாவாசை ஆகிடும்… நிர்வாகிகள் நீக்கம் குறித்து செங்கோட்டையன் சாடல்…!
கட்சிக்காக உழைப்பவர்களுக்கு ஜெயலலிதா வாய்ப்பை வழங்கினார். ஆனால் தற்போது பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே அதிமுக.வில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. நாங்கள் என்ன தவறு செய்தோம். கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்று தானே சொன்னோம். அனைவரும் சேர்ந்து இருக்க வேண்டும், ஒன்றிணைக்க வேண்டும் என்று தான் பேசினோம் ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தியாகங்களை செய்தோம் என அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதாவின் எண்ணத்தின் படி, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என குரல் கொடுத்ததற்காக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளனர் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: செஞ்ச தப்புக்குதான் ஓபிஎஸ் இப்ப அனுபவிக்கிறாரு... பூந்து விளாசிய வைகோ...!