கர்நாடகாவின் பிரபலமான ‘நந்தினி’ நெய்யை போலியாக தயாரித்து விற்ற மிகப்பெரிய மோசடி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது! தமிழகத்தின் திருப்பூரில் ரகசிய ஆலை அமைத்து, சுத்தமான நெய்யுடன் தேங்காய் எண்ணெய், டால்டா, பாமாயில் கலந்து, ‘நந்தினி’ லேபிள் ஒட்டி லட்சக்கணக்கான லிட்டர் போலி நெய்யை கர்நாடகா முழுவதும் விநியோகம் செய்த மைசூரு தம்பதி சிவகுமார் - ரம்யா தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களது வங்கிக் கணக்கில் இருந்த 60 லட்சம் ரூபாயும் முடக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கர்நாடகா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கே.எம்.எஃப் (கர்நாடக பால் கூட்டமைப்பு) விநியோகஸ்தரான பெங்களூரு சாம்ராஜ்பேட்டை மகேந்திரா என்பவரிடம் இருந்து தகவல் கிடைத்ததால், கடந்த 14-ம் தேதி சாம்ராஜ்பேட் நஞ்சம்பா அக்ரஹாரா கிடங்கில் சோதனை நடத்தினர் கே.எம்.எஃப் ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார். அங்கு 8,136 லிட்டர் கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் மகேந்திரா, அவரது மகன் தீபக், முனிராஜ், அபி அர்ஸ் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: முதல்வர் பதவி விவகாரம்! கொஞ்சம் பொறுங்க DK!! சிவக்குமாருக்கு ராகுல்காந்தி சொன்ன சீக்ரெட்!
விசாரணையில் தான் உண்மை அதிர்ச்சி தந்தது – இவர்களுக்கு மூளையாக செயல்பட்டது மைசூரைச் சேர்ந்த சிவகுமார் - ரம்யா தம்பதி தான்! இவர்கள் திருப்பூரில் போலி நெய் உற்பத்தி ஆலை அமைத்து, மகேந்திராவிடம் இருந்து சுத்தமான நந்தினி நெய்யை வாங்கி, தங்கள் ஆலையில் தேங்காய் எண்ணெய், டால்டா, பாமாயில் கலந்து, அதே ‘நந்தினி’ பேக்கேஜிங்கில் அடைத்து கர்நாடகா முழுவதும் விற்று வந்திருக்கிறார்கள். இதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கிறார்கள்.

தலைமறைவாக இருந்த இந்த தம்பதியை போலீசார் தீவிரமாக தேடி நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களது வங்கிக் கணக்கில் இருந்த 60 லட்சம் ரூபாய் உடனடியாக முடக்கப்பட்டது. “வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா?” என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.
கர்நாடக மக்கள் இப்போது அதிர்ச்சியில் உள்ளனர் – “நந்தினி நெய் சாப்பிட்டு இத்தனை நாளும் ஏமாந்தோமா?” என்று சமூக வலைதளங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கே.எம்.எஃப் நிர்வாகம் “போலி நெய்யை உடனே திரும்பப் பெறுகிறோம்” என்று அறிவித்துள்ளது. இந்த மோசடி வழக்கு தமிழகம் - கர்நாடகா எல்லை தாண்டிய பெரிய குற்றச் சதியாக விசாரணை நடக்கிறது.
இதையும் படிங்க: “கரூர் சம்பவம் மறந்துபோச்சா? - புதுச்சேரியிலும் விஜயால் உயிரிழப்பு ஏற்படும்” - பகீர் கிளப்பும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி...!