திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பெங்களூரில் இருந்து வந்த கார் சித்தூர் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டுருந்த பஸ் மீது மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 வயது குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் வாரங்கல்லை சேர்ந்த ஸ்ரீதர் ராவ் குடும்பத்தினர் பெங்களூரில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்ல காரில் இரவு புறப்பட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பங்கரூபாளையம் மண்டலம், சேஷபுரத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்திற்கு பின்னால் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
காரில் இருந்த ஸ்ரீதர் ராவ், அவரது மனைவி லட்சுமி மற்றும் நான்கு வயது குழந்தை ஆத்விகா ஆகியோர் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தனர். கார் டிரைவர் பலத்த காயமடைந்த நிலையில் அங்கு வந்த போலீசார் ஜெ.சி.பி வரவழைத்து பஸ்சின் பின்னாள் சிக்கி கொண்ட காரை இழுத்து வெளியே எடுத்து கார் டிரைவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஓவர் ஸ்பீடில் மரத்தில் மோதிய கார்... துண்டான பெண்ணின் தலை... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் பலி...!
பாலமனேரிலிருந்து புத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏபிஎஸ்ஆர்டிசி பேருந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தபோது, அதிவேகமாக வந்த கார் ஒன்று அதன் பின்னால் பலமாக மோதியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இறந்தவர்கள் உடல்கள் சித்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு சென்ற போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மிஸ் ஆக கூடாது..!! ஆர்.பி உதயகுமார் காரில் அதிரடி சோதனை... தேர்தல் பறக்கும் படையினர் மும்முரம்..!!