வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் இன்று அதிகாலை வரை கனமழை பெய்தது. குறிப்பாக காட்பாடி, பொன்னை, வள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது
இதில் பொன்னை பகுதியில் உள்ள பெரிய ஏரி தண்ணீர் கால்வாய் வழியாக வெளியேறிய போது கால்வாய் தூர்வார் இருக்க வேண்டும் தூர்வாரப்படாததால் அந்த மழை நீர் பொன்னை காலனி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் சாலைகளிலும் சூழ்ந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் தங்கள் பணிகளுக்கு செல்லாமல் சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணியானது போக்குவரத்துக்கும் பாதிப்படைந்துள்ளது பள்ளமேடுகள் தெரியாத அளவிற்கு தண்ணீர்கள் சாலைகளில் தேங்கியுள்ளது பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் அளவிற்கு சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது
இதையும் படிங்க: இதோ வந்துட்டான்ல... வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் கனமழை
வீடுகளில் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியே உள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #வானிலை நிலவரம்: லிஸ்டில் உங்க மாவட்டம் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...