திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதேசிக்காக பத்து நாட்களில் 182 மணி நேரத்தில் 164 மணி நேரம் இலவச தரிசனத்தில் பக்தர்களை அனுமதிக்க அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் பி ஆர் நாயுடு தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்க பி ஆர் நாயுடு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ஒட்டி டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர் முதல்வர் ஆலோசனையின் படி முதல் மூன்று நாட்களுக்கு ரூ 300, ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான வி.ஐ.பி. டிக்கெட் உள்ளிட்ட அனைத்து விதமான தரிசனங்களும் ரத்து செய்யப்படுகிறது. இலவச தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இரண்டாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை 300 பேருக்கு கட்டுகள் ஒரு நாளைக்கு 15,000 டிக்கெட்டுகளும் ஸ்ரீவாணி விஐபி கட்டுகள் ஒரு நாளைக்கு ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும். 10 நாட்களுக்கு அணைத்து முன்னுரிமை தரிசனங்களும், சிறப்பு தரிசனங்களும் ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது.
முதல் மூன்று நாட்களுக்கு ஆன்லைனில் இலவச டிக்கெட் பெற குலுக்கல் மூலம் முன்பதிவுக்கு நவம்பர் 27 ம் தேதி முதல் டிசம்பர் 1 ம் தேதி வரை குலுக்கலுக்காக பதிவு செய்யலாம். 2 ம் தேதி குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு டிக்கெட் ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: திருப்பதி போறீங்களா..? இனி இதெல்லாம் சாப்பிடவே முடியாது.. தேவஸ்தானம் அதிரடி உத்தரவு..!!
தமிழ், தெலுங்கு, கனடா, இந்தி, ஆங்கிலத்தில் பதிவு செய்யும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவஸ்தான இணையத்தில், மொபைல் செயலி, வாட்ஸ் ஆஃப் செயலியில் பதிவு செய்யலாம். 6,7, 8 ம் தேதிகளில் திருப்பதியை சேர்ந்தவர்களுக்கு முதலில் வரும் பக்தர்களுக்கு என ஒரு நாளைக்கு 5000 டிக்கெட் வழங்கப்பட உள்ளது அவர்களுக்கும் ஆன்லைனில் பெறும் விதமாக செய்யப்படும். மொத்தம் 10 நாட்களுக்கு 8 லட்சம் டோக்கன், டிக்கெட் வழங்கப்படும்.
2 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை நேரடியாக இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படும். முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் ஆன்லைனில் இலவச குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் இருக்கும்.
30ம்தேதி முதல் மூன்று நாட்களில் 20 மணி நேரத்தில் 18 மணி நேரம் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படும். இதில் முதல் நாள், 80 ஆயிரம் , இரண்டாம் நாள் 85 ஆயிரம் , மூன்றாம் நாள் 68 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வைக்கப்படும். இந்த மூன்று நாட்களில் டிக்கெட் இல்லாமல் வந்தால் திருமலையில் அனுமதிக்கப்படும் சாமி தரிசனம் இருக்காது.
பரக்காமணி வழக்கு பல கோணங்களில் செல்வதால் இந்த வழக்கில் எவ்வளவு பெரியவர்கள் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
இதையும் படிங்க: இதுலயுமா முறைகேடு..!! எழுந்த பரபரப்பு புகார்.. விசாரணைக்கு திருப்பதி தேவஸ்தானம் உத்தரவு..!!