டெல்லியில் ஓடும் பேருந்தில் மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த பெண்ணின் வாக்குமூலம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கு.
டெல்லியில் மே 2026-ல் ஓடும் பேருந்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், 2012-ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய 'நிர்பயா' கொடூரத்தை மீண்டும் நினைவூட்டி, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்கால்புரியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் ராணி பாக் பகுதியில் இருந்து பிதாம்புராவில் உள்ள தனது வீட்டிற்குச் செல்வதற்காக பேருந்துக்காகக் காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த பீகார் மாநிலப் பதிவு எண் கொண்ட ஆரஞ்சு நிறத் தனியார் சொகுசு பேருந்து ஓட்டுநரிடம் நேரம் கேட்க சென்ற போது, அந்த நபர் வலுக்கட்டாயமாக அப்பெண்மணியை பேருந்துக்குள் ஏற்றியுள்ளார். அதன் பின்னர் ஓட்டுநரும், நடத்துனரும் சேர்ந்து அப்பெண்ணை மாறி, மாறி சித்ரவதை செய்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சுமார் 7 கிலோமீட்டர் தூரம் ஓடும் பேருந்திலேயே இந்தக் கொடூரம் நிகழ்ந்துள்ளது. பின்னர், அந்தப் பெண்ணை நாங்லோய் பகுதியில் பேருந்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு அவர்கள் தப்பிவிட்டனர்.
இதையும் படிங்க: "பதவியே இல்லாவிட்டாலும்" ... திருவண்ணாமலையில் நின்று ஒரே போடாய் போட்ட கே.என்.நேரு...!
இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில், பேருந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தந்திருக்கக்கூடிய வாக்கு மூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு வீட்டில் மூன்று பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். தயவு செஞ்சு என்ன விட்டுடுங்கள் என ரொம்ப கெஞ்சினேன், அப்போது கூட என்னை விடவில்லை. தொடர்ந்து என்னிடம் அத்து மீறினார்கள். தொடர்ந்து மருத்துவர்கள்அவரை மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தியும், என்னுடைய கணவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். என்னோட மகள்கள் எனக்காக காத்திருக்காங்கன்னு சொல்லி பாதிக்கப்பட்ட பெண் வீடு திரும்பியுள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் மீது அடுத்தடுத்து பாரம்..!! பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மு.க ஸ்டாலின் கடும் கண்டனம்..!!