துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று இருந்தார். நேற்று மதியம் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிச்சாமி இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அமித்ஷாவை சந்தித்தபோது முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கைகளிடம் வழங்கியதாக தெரிவித்திருந்தார்.
தேர்தல் வெற்றியை விட தன்மானமே முக்கியம் என எடப்பாடி பழனிச்சாமி பேசியதை குறிப்பிட்ட ttv, வீர வசனம் எல்லாம் பேசிவிட்டு தற்போது அமித்ஷாவை சந்தித்திருப்பதாக விமர்சித்தார். தமிழ்நாட்டு மக்களை எடப்பாடி பழனிச்சாமியால் இனியும் ஏமாற்ற முடியாது, இரட்டை இலையை வைத்துக்கொண்டு அதிமுக தொண்டர்களை எடப்பாடி பழனிச்சாமி ஏமாற்றிய வருவதாக குற்றம் சாட்டினார்.

இபிஎஸ் அடிக்கும் கூத்துக்களை ராஜதந்திரம் என்று கூறிக் கொண்டிருந்ததாகவும், இப்போது சாயம் வெளுத்து விட்டதாகவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமியை இன்று முதல் முகமூடியார் பழனிச்சாமி என்று அழைப்பதாகவும் விமர்சித்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்த டி டி வி தினகரனுக்கு காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்தார். முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்ற அருமையான கோரிக்கையை எடப்பாடி பழனிச்சாமி முன் வைத்ததாக குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ஓங்கும் செங்கோட்டையன் கை! சாரை சாரையாக குவிந்த TTV ஆதரவாளர்கள்...
ஆனால் டிடிவி தினகரனுக்கு வயிறு எரியும் போல என்றும் கேலி செய்து வருகிறார் எனவும் விமர்சித்தார். அவர் வெறுப்பு நிறைந்தவர் என்று கூறிய காயத்ரி ரகுராம், மக்கள் அவரைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அப்படி ஒன்னும் வருத்தமில்ல! நயினார் நல்ல நண்பர்.. மனம் திறந்த டிடிவி..!!