வடக்க உள்ளவன் டேபிள் தொடைக்க வரான்… என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வை திமுக தலைவர்கள் தூண்டுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் ஏற்கனவே வட இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பானிபூரி விற்கவும், கட்டட வேலைக்கும், டேபிள் துடைக்கவும் தான் வடக்கர்கள் தமிழகத்திற்கு வருகிறார்கள் என அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் எள்ளி நகையாடியிருப்பதை வன்மையாகக் கண்டிப்பாக தெரிவித்துள்ளார். தனது ஆணவப்பேச்சிற்குத் திமுக அமைச்சர் உடனடியாக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாழ்வியல் தத்துவத்தின் மூலம் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் பறைசாற்றிய நமது தமிழ் மண்ணில், வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வைத் திமுக தலைவர்கள் தொடர்ந்து விதைக்க முயல்வது அருவருப்பானது மட்டுமன்றி ஆபத்தானதும் கூட என்றார். வடக்கு, தெற்கு என இன ரீதியாக மக்களைப் பிரித்தாளத் துடிக்கும் திமுகவின் பிளவுவாத அரசியலை அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸும் கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆமோதிக்கின்றனவா என்று கேட்டார்.
இதையும் படிங்க: MLA பழனியாண்டி கொடூரத் தாக்குதல்..! தவறு செய்தவர்களை பாதுகாக்க அரசு நினைக்காது... சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்..!
இமயம் முதல் குமரி வரை ஒருமித்த பண்பாட்டுக் கலாச்சாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் நமது பாரதத்தில், ஆட்சியைப் பிடிக்கவும் அதிகாரத்தைக் கைப்பற்றவும் வட இந்திய மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தத் துடிக்கும் திமுக எனும் நஞ்சுக்கொடியை வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பிடுங்கி எறியப்போகிறார்கள் என்று உறுதிப்பட தெரிவித்தார்.
இதையும் படிங்க: நிருபர் மீதான தாக்குதல்... கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்..! காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினரும் கண்டனம்..!