தமிழக வெற்றிக் கழகம் திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளது. தான் ஆட்சியில் இருந்தபோது கிராணைட் கிரிமினல் வழக்கை மூடி மறைத்து பாதுகாத்தவர்கள், இப்போது சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் தண்டனை பெற வேண்டும் என்று உத்தமன் போல் பேசுவதாக அமைப்பு குறிப்பிட்டுள்ளது. காவல்துறை அமைச்சராக இருந்தவருக்கு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டபோதே பல குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியாமல் இருந்ததா, அல்லது தெரிந்தும் இறுதி அறிக்கை அவருக்குத் தெரியாமல் தாக்கல் செய்யப்பட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இதன் மூலம் தான் நிர்வாகத் திறனற்றவர் என்பதை அவரே ஒப்புக்கொள்கிறார் என தமிழக வெற்றிக் கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறும் அறிக்கைகள் வெற்றுப் புளுகு என்று அமைப்பு தெரிவித்துள்ளது. அண்ணா நகர் வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தையும் அவரது குடும்பமும் அலைக்கழிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட பிறகும் அந்த விசாரணையைத் தவிர்க்க உச்சநீதிமன்றத்தை அணுகிய அயோக்கியத்தனம் திமுக ஆட்சியில்தான் நடந்தது என குற்றம் சாட்டியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் முதல் தகவல் அறிக்கை கசிந்ததும், ஆய்விற்காக போக்ஸோ வழக்கு விவரங்களை அனுபவமில்லாதவர்களிடம் அளித்ததும் திமுக ஆட்சியின் காலத்தில்தான் நிகழ்ந்தவை என்று சுட்டிக்காட்டியுள்ளது.பொள்ளாச்சி வழக்கை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியது திமுகதான் என தமிழக வெற்றிக் கழகம் நினைவுபடுத்தியுள்ளது. அன்றைக்கு அந்த வழக்கிற்காக பொங்கி எழுந்தவர்கள் இன்று பதுங்குக் குழியில் மறைந்திருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் விளம்பரத்திற்காக கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்த திமுக, அதிமுக!! மலைக்க வைக்கும் செலவு கணக்கு!
மேலும், பங்காளிகள் இருவரும் ஒரே வாட்ஸ்அப் குழுவில் இருக்கிறீர்களோ என்றும், ஒரு பதிவு வந்த இரண்டு மணி நேரத்திற்குள் மற்றொரு பதிவு வருவது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது. கொடநாடு வழக்கை ஆட்சிக்கு வந்தால் விசாரித்து கிழித்துவிடுவோம் என்று வாய்க்கு வந்தபடி வாக்குறுதி அளித்துவிட்டு, ஐந்து ஆண்டுகள் அமைதி காத்தது இந்தப் புரிதலின் அடிப்படையில்தானா என கேட்டிருக்கிறது.இருப்பினும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் பூஜ்ய சகிப்புத்தன்மை என்ற நிலையில் மாண்புமிகு முதலமைச்சர் உறுதியாக இருப்பதாகவும், கிராணைட் கிரிமினல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்பதை மிக உறுதியாகத் தெரிவிப்பதாகவும் தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: விடிந்ததுமே தலையில் இறங்கிய இடி..! திமுக MP சி. என். அண்ணாதுரை வீட்டில் ரெய்டு..! தீவிர சோதனை..!!