ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஜெம் குழுமத்தின் தலைவரான வீரமணி, சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இவர் இந்திய கிரானைட் தொழில்துறையில் நீண்ட காலமாக செல்வாக்கு மிக்க தொழிலதிபராக அறியப்பட்டவர். அவரது வயது எண்பத்து நான்கு. இந்த வழக்கு 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது.
சென்னையில் உள்ள ஒரு குழந்தை உரிமை ஆர்வலர், ஒரு பென் டிரைவை காவல்துறையிடம் ஒப்படைத்தார். அதில் ஒரு வயதான நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் காட்சிகள் இருந்தன. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆரம்ப விசாரணையில் சிறுமியை அடையாளம் காண முடியவில்லை என்றும், வீடியோ 2019 ஆம் ஆண்டைச் சேர்ந்தது என்றும் காவல்துறை தரப்பு தெரிவித்து, வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் 2026 ஆகஸ்ட் 19 ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் அந்த அறிக்கையை நிராகரித்து, மேலும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது. வீடியோவில் தோன்றிய நபர் ஜெம் வீரமணி தான் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதன் நிர்வாகத்தை தனது தொழில் தொடர்புடைய சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார். அந்த வீட்டில் சிறுமிகளை அழைத்து வந்து வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 2026 ஆகஸ்ட் 29 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப் பிரிவின் விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கில் அடுத்த பூகம்பம்... நேரடியாக களையெடுக்கும் சி.எம்.விஜய்... முக்கிய புள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!
பாலியல் வழக்கில் கைதான தொழிலதிபர் ஜெம் வீரமணி விவகாரம் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு உயர் அதிகாரிகளுக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், சாந்தி மற்றும் அவரது கணவன் மகேந்திர சிம்ஹன் ஜாமீன் கேட்டு போக்சோ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: நாடே அதிரும் கொடூர வழக்கு..! திமுக கப்சிப்..! வாய தொறங்க ஸ்டாலின்..! தவெக தாக்கு..!!