சிந்தாமணி பள்ளி மாணவி கார் மோதி உயிரிழந்த விவகாரத்தில் 2வது நாளாக நடந்த சாலைமறியல் போராட்டத்தால் பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. இதை அடுத்து போலீசார் பேச்சு வார்த்தைக்கு பின் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள எனற்கட்டும்செவலை சேர்ந்த மாரிசாமி வேலுமயில் தம்பதியின் 4 வயது குழந்தை சிவயாழினி. புளியங்குடி சிந்தாமணியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன்பள்ளியில் யுகேஜி பயின்று வந்தார்.
நேற்று பள்ளி வளாகத்தில் குழந்தைகள் இருக்கும் இடத்தில் கார் திரும்பும் போது குழந்தை மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சிசிடிவி ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

குழந்தை இறப்பு குறித்து பள்ளி நிர்வாகம் உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காமல், அலட்சியமாக இருக்கும் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், குழந்தை இறந்தது குறித்து விளக்கம் தராததால் குழந்தையின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் செங்கோட்டை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணி முதல் இன்று மாலை வரை சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: அதிர வைத்த +2 மாணவியின் கொடூரக் கொலை… முனீஸ்வரன் என்ற இளைஞர் கைது.!!
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் குழந்தையின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி வந்தனர். காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் 2வது நாளாக சிந்தாமணி பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்த வழக்கில் முள்ளிகுளத்தை சேர்ந்த ஓட்டுநர் ராம்காந்த் என்பவரும் இலஞ்சியைச் சேர்ந்த செந்தில் ராஜா என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், சிவ யாழினி பெற்றோருடனும் உறவினர்களிடமும் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதில் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் கொல்லம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 20 மணி நேரமாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட வாகனங்கள் மீண்டும் வழக்கம்போல தேசிய நெடுஞ்சாலையில் சென்று வருகிறது.
இதையும் படிங்க: மொழிப்போரில் ஒரு உயிர் பலி! ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் காயமடைந்த மே 17 இயக்க தோழர் சிவக்குமார் காலமானார்!