தமிழ்நாடு, சமூக நீதியின் முன்னோடியாகக் கருதப்படும் மாநிலமாக, தனது இட ஒதுக்கீட்டு கொள்கையை வழங்கி நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கிறது. 1920களில் இருந்தே தொடங்கிய இந்தப் பயணம், பிராமணர் அல்லாத மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் உருவெடுத்தது.
இந்த ஒதுக்கீடுகள், தமிழ்நாட்டின் 89% மக்கள்தொகைக்கு சமூக நீதியை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. கல்வியில் தொடங்கி அரசியல் வரை இட ஒதுக்கீடு என்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. கல்வியில் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும் போது பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களும் முன்னேற வழி வகுக்கிறது.

இந்த நிலையில், தென் தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு வாழக்கூடிய முக்குலத்தோர் மக்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி வலியுறுத்தியுள்ளார். முக்குலத்தோர் மக்கள் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் தனித்தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சொந்த சமூக மக்களாலேயே அன்புமணிக்கு இப்படியொரு நிலையா? - திட்டவட்டமாக சொன்ன ஜி.கே.மணி...!
இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 68 வது குருபூஜை கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின், துணை குடியரசு தலைவர் சி பி ராதாகிருஷ்ணன், டிடிவி தினகரன் உட்பட ஏராளமான அரசியல் கட்சிகளினர் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மதுரையில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தியபின் ஜி.கே.மணி இதனை வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை வளாகத்தில் பாமக எம்எல்ஏக்கள் திடீர் போராட்டம்... பரபரப்பு...!