முகுந்தனுக்கு கட்சி பதவி கொடுத்ததில் தொடங்கிய பிரச்சினை இன்று வரை அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையில் தீர்வு கிடைக்காமல் நடந்து வருகிறது. பாமகவின் தலைவர் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவர் தானே என ராமதாஸ் கூறுகிறார். மறுபக்கம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் நான்தான் என அன்புமணி கூறி வந்தார்.
இருவருக்கும் இடையிலான பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது. தந்தைக்கும் மகனுக்குமான பிரச்சனை கட்சியில் பிளவை ஏற்படுத்தியது. அன்புமணி அணி, ராமதாஸ் அணி என இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. ராமதாசை செயல் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கினார் ராமதாஸ். இருவருக்கும் இடையிலான பிரச்சினை தீர்வு ஏற்படாமல் நீண்டு வருகிறது. இந்த நிலையில் பாமகவில் இருந்து ஜி.கே மணியை நீக்குவதாக அன்புமணி ராமதாஸ் அறிவித்தார்.

அன்புமணி குறித்து அவதூறு கருத்துக்களை கூறுவது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் இதுவரை பதில் அளிக்காத நிலையில் கட்சியிலிருந்து நீக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஜிகே மணியை அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பாமகவில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி என்னை எப்படி கட்சியில் இருந்து நீக்க முடியும் என ஜி.கே. மணி கேள்வி எழுப்பினார்.
பாமகவில் இருந்து ஜிகே மணி நீக்கப்படுவதாக அன்புமணி அறிவிப்பு வெளியிட்டது தொடர்பாக ஜி.கே. மணி இவ்வாறு தெரிவித்தார். பாமகவில் ஒருவரை இணைப்பதற்கும் நீக்குவதற்கும் முழு அதிகாரம் பெற்றவர் ராமதாஸ் மட்டுமே என்றும் கூறினார். பாமகவில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாத அன்புமணி எப்படி என்னை கட்சியில் இருந்து நீக்க முடியும் என்று சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளார். பாமக என்றாலே ராமதாஸ் மட்டும் தான் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாமகவிலிருந்து G.K. மணி நீக்கம்... அவதூறு பரப்பியதாக அன்புமணி அதிரடி நடவடிக்கை...!