ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வாசித்தது. அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்குள்ள அதிகாரங்கள் மசோதா மீது முடிவெடுக்கும் உச்சவரம்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மசோதாவுக்கு எவ்வாறு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிமுறை குறித்தும் விவாதிக்கப்பட்டது என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆளுநருக்கு அரசியல் சாசனம் 200, 201 இல் இருக்கும் அதிகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநர்களுக்கு உத்தரவிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஒவ்வொரு முறையும் நீதிமன்ற கருத்தை கேட்க வேண்டியதில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைச்சரவை தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்றும் மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசு தலைவர் மற்றும் ஆளுநருக்கு குறிப்பிட்ட காலக்கெடுவை விதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

மசோதா மீது காரணமே இன்றி முடிவெடுக்காவிடில் நீதிமன்றமே முடிவு எடுக்க முடியும் என்றும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் மசோதாவை நிராகரிக்கலாம் என்றும் ஆனால் முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளது. அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ் முடிவெடுக்க ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் தான் இருக்கின்றன என்றும் மத்திய அரசு கூறுவது போல் மசோதா தொடர்பாக ஆளுநருக்கு நான்காவது வாய்ப்பு இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது வழக்கின் முந்தைய தீர்ப்புக்குள் செல்ல விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நாடே எதிர்பார்ப்பு... குடியரசுத் தலைவர் கேட்ட 14 கேள்விகள்... இன்று தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்...!
ஒரு மாநிலத்தில் இரண்டு நிர்வாக அதிகாரங்கள் இருக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துவதாகவும் மசோதா மீது காரணமே இன்றி முடிவெடுக்காவிடில் நீதிமன்றங்கள் ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என்றும் நீதிமன்றங்கள் ஆளுநருக்கு வரையறுக்கப்பட்ட உத்தரவை பிறப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால வரம்பை நிர்ணயிப்பது சட்டம் வழங்கியுள்ள நெளிவு சுழிவுக்கு முரணாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் தனது அதிகாரத்தை பயன்படுத்துவதற்காக காலக்கெடுவை நிர்ணயிக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: SIR பணிகளுக்கு எதிர்ப்பு... உள்ளாட்சி தேர்தலை சுட்டிக்காட்டி சுப்ரீம் கோர்ட்டில் மனு...!