பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றம். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது.
இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் சமீப நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கூட இது போன்ற சம்பவங்கள் நீடிக்கின்றன.

இந்த நிலையில், குளித்தலையில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காமக்கொடூரனை நடுரோட்டில் ஓட ஓட அரிவாளால் பாட்டி வெட்டி உள்ளார். வன்கொடுமை செய்த நபரை வெட்டிய பாட்டி போலீசில் ஒப்படைத்துள்ளார். பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் விட்டுவிடுமாறு கூறி உறவினர் ஆன இளைஞருடன் சிறுமியை பாட்டி பைக்கில் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சுதந்திர தின கொண்டாட்டம் எதிரொலி..! தேநீர் விருந்து ரத்து... ஆளுநர் மாளிகை அறிவிப்பு..!!
அப்போது சிறுமியை உறவினர் வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அந்த இளைஞர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். சிறுமி நடந்ததை பாட்டியிடம் கூற நான்கு நாட்களாக தலைமறைவாக இருந்த இளைஞர் என்ற ஊருக்குள் வந்ததை எடுத்து அரிவாள் விட்டு விழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் அறை வாசலில் சிவப்பு துணி.. நம்பிக்கையா, அரசியல் நெருக்கடியா?