தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) மீட்டெடுக்கும் வகையில், 2026 ஜனவரி 3ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.
இந்த திட்டம் பழைய ஓய்வூதிய திட்டத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு, ஓய்வூதியம் கடைசி ஊதியத்தின் 50 சதவீதமாக நிர்ணயிக்கப்படும் வகையில் உள்ளது. இது 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று அரசு அறிவித்தது. அரசு இந்த திட்டத்திற்காக ஒரே நேரத்தில் 13,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததுடன், ஆண்டுதோறும் சுமார் 11,000 கோடி ரூபாய் கூடுதலாக செலவழிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை வகுத்து அறிவிக்க வலியுறுத்தி இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. சிறப்பு கருணை ஓய்வூதியம் பெற விதிகளை அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் இருந்து மதுபானம் கொண்டு வரலாமா? அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர் நீதிமன்றம்..!
தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட மூன்று பேர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல் தொடர்பாக 8 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் இழப்பு..! இனி சிபிஐ தான் விசாரிக்கும்..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!