தமிழ்நாட்டில் உள்ள சாலைகள் தெருக்களின் பெயர்களில் சாதியப் பெயர்களை நீக்க தமிழக அரசு பிறப்பித்த அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சிகளில், எந்தெந்த தெருக்கள், ஊர் பெயர்கள் ஆட்சேபனைக்கு உரிய வகையில் உள்ளது என்றும் எந்தெந்த தெருக்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்பது குறித்த விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை சேர்ந்த பரமசிவம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு உள்ள சாதிப் பெயர்களை நீக்க அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற சாதிப்பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19ம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தனது மனதில் நடைமுறையில் பல பிரச்சனைகள் உள்ளது எனவே இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும என்ன மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரணை செய்த நீதிமன்றம் அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் சதீஷ்குமார் ஜோதி ராமன் அவர்கள் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் உத்தரவில், தமிழகத்தில் உள்ளாட்சிகளில், எந்தெந்த தெருக்கள், ஊர் பெயர்கள் ஆட்சேபனைக்கு உரிய வகையில் உள்ளது.எந்தெந்த தெருக்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்பது குறித்த விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.