தமிழ் சினிமாவின் தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது திரை வாழ்க்கையின் மூலம் தமிழக மக்களின் இதயங்களை கைப்பற்றியவர். ஆனால், அவரது அரசியல் பயணம் தொடங்கியபோது, அந்த ரசிகர்களின் அன்பு இன்னும் ஆழமான, உணர்ச்சிகரமான வடிவத்தை அடைந்தது. 2024 பிப்ரவரி 2 அன்று தமிழக வெற்றி கழகம் (த.வெ.க) என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியபோது, விஜயின் ரசிகர்கள் அது வெறும் கட்சி அல்ல, அவர்களின் கனவுகளுக்கான ஒரு இயக்கம் என்று உணர்ந்தனர்.
இந்த அன்பு, வெறும் பட ரசிகர்களின் உற்சாகத்தைத் தாண்டி, அரசியல் அடிப்படை உருவாகி, ஆதரவு பெற்றுள்ளார். சமீபத்தில் நிகழ்ந்த கரூர் சம்பவம் தமிழக வெற்றி கழகத்திற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. அதிலிருந்து மீண்டும் தமிழக வெற்றி கழகம் மீண்டும் கட்சி பணியை தீவிரப்படுத்தி வருகிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நாளை முதல் பிரச்சாரம் நடத்துகிறார்.

விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டுள்ள நிலையில் நாளை 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிப்பாரு என்றும் பெரம்பூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து அவரது திரைத்துறை பயணமும் சிக்கலை சந்தித்தது. விசில் பயன்படுத்தத் தடை, விஜய் பாடல்களுக்கு தடை போன்ற பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்த நிலையில் தலைமையாசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர் டி. செல்வம் சஸ்பெண்ட்... செல்வப் பெருந்தகை அதிரடி உத்தரவு..!!
தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாட்டம் நடத்தப்பட்டது. இந்த விழாவில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கலந்து கொண்டு விஜய் பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். கோடம்பாக்கம் ஏரியா பாடலுக்கு நடனமாடிய நிலையில், தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பள்ளிக்கல்வித்துறை இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
இதையும் படிங்க: மத்திய அரசுக்கு EPS ஏதாச்சு அழுத்தம் கொடுத்தாரா? தமிழிசை வாரிசு அரசியல் இல்லையா? அமைச்சர் சேகர்பாபு சரமாரி கேள்வி..!!