கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முத்துராயன் ஜி.பி. பகுதியைச் சேர்ந்த அப்பாஜி ராஜி மற்றும் நிர்மலா தம்பதியினரின் 15 வயது மகள், தற்போது பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு அங்குள்ள மத்திகிரி அருகே செயல்பட்டு வரும் அரசு ஐடிஐ கல்லூரியில் படித்து வருகிறார்.
கடந்த 10ஆம் தேதி மாலை சுமார் 5 மணியளவில் ஐடிஐ கல்லூரி வகுப்புகள் முடிந்து வெளியே வந்த மாணவி, தனது தாயாரை செல்போனில் தொடர்புகொண்டு பேருந்துக்காக காத்திருப்பதாகவும், பேருந்து வந்ததும் வீட்டிற்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இரவு 10 மணி வரை மாணவி வீட்டிற்கு வராததால், அவரது பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், மாணவியின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முதல்வர் விஜய் விசிட்? பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், ஐடிஐ கல்லூரிக்கு சென்று விசாரித்துள்ளனர். அங்கும் முறையான பதில் கிடைக்காததால், மத்திகிரி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.
புகார் அளித்து 15 நாட்கள் கடந்துள்ள நிலையில், இதுவரை தனது மகள் மாயமானது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், இன்று வருமாறும், நாளை வருமாறும் கூறி போலீசார் தங்களை அலைக்கழிப்பதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாயமான தங்களது மகளை மீட்டு தர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கொடூர பாலியல் வழக்கு... ஜெம் வீரமணி விவகாரத்தை விசாரிக்கும் SIT குழு விரிவாக்கம்..!!