இஸ்ரேல் ஈரான் இடையே மூன்றாவது நாளாக தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் மீது லெபனான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகனைகள் ட்ரோன்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ஈரானிடையே மூன்றாவது நாளாக இந்த தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் தற்பொழுது இஸ்ரேல் மீது லெபனான் தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகனைகள் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானை தொடர்ந்து மூன்றாவது நாளாக லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இஸ்ரேல் மீது ஏவுகனைகளை வீசி ஹெஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக நேற்றைய தினம் ஈரானின் உச்சபட்ச தலைவரான கமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா ஈரான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வந்தது. இஸ்ரேல் நேற்று முன்தினம் அதிரடியாக ஏவுகணங்களை ஏவி ஈரானின் தலைநகரான தெஹரானில் தாக்குதல் நடத்தியது. அந்த வகையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக தற்பொழுது லெபனான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ஈரான் நேரடியாக இஸ்ரேல் அமெரிக்காவை தாக்காமல், மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் விமானப்படை, தரைப்படை போன்ற முக்கிய படைத்தளங்களை தாக்கி வருகிறது. அந்த வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் இந்த பதற்றமானது சூழ்நிலை நிலவி வரும் நிலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஈரானுக்கு துணையாக லெபனான் களத்தில் இறங்கியுள்ளது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: பற்றி எரியும் UAE... ஒரே நேரத்தில் 8 நாடுகள் மீது ஏவுகணைகளை வீசிய ஈரான்... பீதியில் உலகம்...!!
மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தொடங்கிய மோதல் இப்போது மூன்றாம் உலக போராக வேகமாக மாறி வருவதாகத் தெரிகிறது. சண்டையின் முதல் 24 மணி நேரத்தில், 1,000க்கும் மேற்பட்ட ஈரானிய இலக்குகளை குறிவைத்ததாக அமெரிக்கா கூறுகிறது. இந்த தாக்குதல்களில் ஏவுகணை நிறுவல்கள், கட்டளை மையங்கள் மற்றும் புரட்சிகர காவல்படை தளங்கள் ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க மத்திய கட்டளையின்படி, இந்த நடவடிக்கையில் திருட்டுத்தனமான குண்டுவீச்சு விமானங்கள், ட்ரோன்கள், போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டன. ஈரானின் பதிலடி கொடுக்கும் திறனை பலவீனப்படுத்த பல கட்டங்களாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையில், தெஹ்ரான் உட்பட பல நகரங்களில் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதற்கிடையில், ஈரான் மீதான தாக்குதல்களுக்கு ஹெஸ்பொல்லா பழிவாங்கி வருகிறது.
தற்போது லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிப்பாக இரு நாடுகளும் மாறி மாறி ஏவுகனைகள் ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹெஸ்புல்லா அமைப்பினர் ஏவிய ஏவுகணைகளை இடமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பினர்களுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும் எனவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது நாளாக ஈரான் துபாய், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படிங்க: உலகமே பேரதிர்ச்சி... ஈரான் பள்ளி மீது ஏவுகணையை இறக்கிய இஸ்ரேல்... 40 மாணவிகள் உடல் சிதறி பலி...!