ஸ்பெயினின் கிரனாடாவில் உள்ள ஒரு சிறிய நகரமான லாஞ்சரோனில் யாரும் மரணிக்க கூடாது என்ற விசித்திரமான சட்டம் பின்பற்றப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?. 1999 ஆம் ஆண்டு அப்போதைய மேயர் ஜோஸ் ரூபியோ அந்த நகரத்தில் இறப்பு சட்டவிரோதமானது என்ற விநோதமான ரூல்ஸைக் கொண்டு வந்தார்.
1999 ஆம் ஆண்டு முதல் முன்னாள் மேயர் ஜோஸ் ரூபியோ, நகராட்சி அதிகாரிகள் புதிய கல்லறை அமைக்க நிலம் வாங்கும்போது குடியிருப்பாளர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அறிவித்ததிலிருந்து இந்த விசித்திரமான விதி நடைமுறையில் உள்ளது. அந்த அரசாணையில் லஞ்சரோனில் இறப்பது சட்டவிரோதம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
நகரத்தில் ஏற்பட்ட கல்லறை நெரிசல் பிரச்சனை காரணமாக இந்த விதி உருவாக்கப்பட்டுள்ளது. 4000 பேரைக் கொண்ட இந்த வினோத நகரத்தில் இருபத்தி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும், ஒரே ஒரு கல்லறை மட்டுமே உள்ளது.
இதையும் படிங்க: கழுத்தை சுற்றிய விஷமுள்ள நாகப்பாம்பு.. இறுதியில் பாம்புப்பிடி வீரருக்கு நேர்ந்த சோகம்..!
இருப்பினும், "சாகக்கூடாது" என்ற விதி உள்ள ஒரே இடம் லாஞ்சரோன் மட்டுமல்ல, நார்வேயின் லாங்கியர்பைனில் 1950 முதலே இதேபோன்ற தடை உள்ளது. ஆர்க்டிக் சபார்க்டிக் காலநிலையில் புதைக்கப்பட்ட உடல்கள் அங்கு சிதைவதில்லை என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். மேலும் புதைக்கப்பட்ட உடல்களிலிருந்து 1917 இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் உயிருள்ள மாதிரிகளைக் கூட மீட்டெடுத்தனர். நோய் பரவல் குறித்த கவலைகள் காரணமாக, அங்கும் கல்லறைகள் கிடையாது.
இதையும் படிங்க: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... காஞ்சிபுரம் டு சென்னை சாலையில் திடீர் மாற்றம்...!