தமிழ் சினிமா உலகின் மிகப் பெரிய நட்சத்திரமாகவும், தற்போது தமிழக முதலமைச்சராகவும் இருக்கும் தளபதி விஜய்யின் இறுதி திரைப்படமான 'ஜனநாயகன்' இன்று (ஜூலை 23) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை முன்னிட்டு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உற்சாகம் அலையடித்து வருகிறது. 'ஜனநாயகன் திருவிழா' என்ற பெயரில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலையிலும், குறிப்பாக திரையரங்குகளில் பிரம்மாண்டமான கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவான இந்த அரசியல் ஆக்ஷன் திரில்லர் படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்தப் படம், விஜய்யின் 69வது படமாக அறிவிக்கப்பட்டு, அவரது அரசியல் பயணத்திற்கு முன் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ளது.

. படத்தின் கதை மக்களின் வாழ்வோடு இணைந்த அரசியல் செய்திகளை உள்ளடக்கியதாக இருப்பதால், ரசிகர்களுக்கு இது சாதாரண பட வெளியீடாக இல்லாமல் ஒரு உணர்ச்சிப் பெருக்கமாக மாறியுள்ளது. ஜனநாயகன் திரைப்படம் எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு ஏற்படுத்தியதோ அதே அளவுக்கு படத்தின் டைட்டில் கார்டு ஏற்படுத்தியுள்ளது. மாண்புமிகு மாணவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விஜய் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக உருவெடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தடைகளை கடந்தது திரையில் “ஜனநாயகன்”... தமிழகத்தில் 1000+ தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்...!
மாபெரும் திரை கலைஞனாக இருந்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக ஆகியுள்ளார். அவரின் ஆகச்சிறந்த திரைப்பயணம் ஜனநாயகன் திரைப்படத்துடன் நிறைவு பெறுகிறது. அதனை திருவிழா போல கொண்டாடும் மக்கள் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் என்ற டைட்டில் கார்டு வரவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டனர். இன்று ஜனநாயகம் திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் “தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி சி. ஜோசப் விஜய்” என்ற டைட்டில் கார்டு இடம்பெற்றுள்ளது. அது மட்டும் இல்லாமல் சட்டசபையில் முதல்வர் விஜய் காண்பித்த கை சைகையும் இடம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: “பண்டிகையை கொண்டாடுங்க...” - கர்நாடகா, கேரளாவில் ரிலீஸ் ஆனது ‘ஜனநாயகன்’... தியேட்டர்களை திணறடித்த சேட்டன்கள்...!