தமிழக அரசியல் களம் தற்போது மிகுந்த பரபரப்பு மற்றும் பதற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையிலான கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 10 இடங்கள் குறைவாக உள்ளது. இதனால் ஆட்சி அமைக்கும் பணியில் தொடர்ந்து இழுபறி நிலவியது.
ஆளுநர் மாளிகைக்கு சென்ற தவெக தலைவர் ஜோசப் விஜய் ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தவெக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் விஜய் வழங்கினார். அப்போது ஆட்சி அமைத்த பின்பு பெரும்பான்மையை நிரூபிப்பதாக விஜய் ஆளுநரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்கள் பட்டியலை பதவி ஏற்புக்கு முன்பே ஆளுநர் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் 5 எம்எல்ஏக்கள் கிடைத்தனர். மேலும் ஐந்து எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறது.

இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்தார். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே என்றும் கூறினார். இதுகுறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக உள்ளன என்றும் தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் விஜயை மக்கள் முதலமைச்சர் என்று முடிவுசெய்திருக்கிறார்கள் என்றார்.
இதையும் படிங்க: தொகுதி மறு வரையறை..! கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி..! மக்களவையில் கனிமொழி வாதம்..!
மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல. ஆளுநர் அவர்களுக்கு இந்த அளவிற்கு அரசியலும், அரசியல் சாசன விதிகளும் தெரியும் என்று நம்புவதாக கூறினார். பாஜக ஆளுநர் மாளிகை வழியாக அரசியல் செய்வதை உடனே நிறுத்தவேண்டும் என்றார். ஆளுநர் தவெக தலைவர் விஜயை உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்றும் ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கும்பகோணம் மேயர் பதவிக்கு ஆபத்து... தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட காங்கிரஸ்...!