பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ ஒரு உளவாளிக்கு உளவு பார்ப்பதற்காக எவ்வளவு பணம் செலுத்துகிறது? என ஜோதி மல்ஹோத்ராவின் ஆடம்பர வாழ்க்கை பல கேள்விகளை எழுப்பப்பி இருக்கிறது. தகவல்களின்படி, 2020 ஆம் ஆண்டு வரை, ஜோதி ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். வேலையை இழந்த பிறகு யூடியூபர் ஆனார். இந்த நேரத்தில், ஜோதி பாகிஸ்தான் உளவாளிகளுடன் தொடர்பு கொண்டு உளவுத்துறை தகவல்களை வழங்கத் தொடங்கினார்.

உளவுத்துறை தகவல்கள் எங்கிருந்து பெறப்பட வேண்டும் என்பதைப் பொறுத்து பணம் தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளுக்கு குறைவான பணம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து உளவுத்துறை தகவல்களைப் பெறுவதற்கு ஐஎஸ்ஐ அதிக பணத்தை செலவிடுகிறது.
அதாவது இந்த நாடுகளில் பணிபுரியும் ஏஜெண்டுகளுக்கு ஐ.எஸ்.ஐ அதிக பணம் செலுத்துகிறது. உளவாளிகளுக்கு பணம் கொடுக்க, பாகிஸ்தான் அரசு ஐஎஸ்ஐக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 பில்லியன் பட்ஜெட் ஒதுக்குகிறது.
இதையும் படிங்க: இந்தியாவே வருந்தாதீர்... பாகிஸ்தானை உயிர் பலி எடுக்கும் பலூச்... ஐ.எஸ்.ஐ அதிகாரி கொடூரக் கொலை..!
ஐஎஸ்ஐ இந்தப் பணத்தை தனது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், உளவாளிகளுக்கு பணம் செலுத்தவும் பயன்படுத்துகிறது. தற்போது ஐஎஸ்ஐயின் கீழ் 4 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். பாகிஸ்தான் அரசோ அல்லது உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ.யோ உளவாளிகளிக்கு பணம் கொடுப்பது குறித்து இதுவரை எதுவும் கூறவில்லை.
ஆனால் பிடிபட்ட உளவாளிகள் வெளிப்படுத்திய தகவல்களின்படி, பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனம் உளவாளிகளுக்கு பணம் செலுத்துவது உறுதியாகி இருக்கிறது.

பிப்ரவரி 2025 -ல் அமிர்தசரஸில் இருந்து ஐஎஸ்ஐ ஏஜெண்டை பஞ்சாப் காவல்துறை கைது செய்தது. கைதுக்குப் பிறகு, அமிர்தசரஸ் கிராமப்புற எஸ்எஸ்பி ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். சிறிய தகவலுக்கு ஐ.எஸ்.ஐ 5 ஆயிரம் ரூபாயும், பெரிய தகவலுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்குகிறது என்று கூறினார்.
2011 ஆம் ஆண்டு, ஒரு அமெரிக்க அதிகாரி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தபோது பிடிபட்டார். உளவு பார்த்ததற்காக பாகிஸ்தான் தனக்கு ரூ.3 கோடி கொடுத்ததாக அந்த அதிகாரி தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனம் தனது நிலை, தகவல்களின் அடிப்படையில் உளவாளிகளுக்கு பணம் செலுத்துகிறது. ஜோதி மல்ஹோத்ரா வழக்கில், அவருக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டது என்பது குறித்து இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை?
இதையும் படிங்க: பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பாக்., உளவாளி.. ஹாயாக சுற்றித்திரியும் ஜோதி மல்ஹோத்ரா.. பின்னணியில் சதித்திட்டமா?