கரூர் மாவட்டத்தில் வேலுச்சாமிபுரத்தில் 27.09.2025 அன்று தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 நபர்கள் உயிரிழந்தது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறையினரின் (சி.பி.ஐ.) விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இதர பொது மக்கள்/ அமைப்புகள் ஆகியோர் மனுக்கள் ஏதும் அளிக்க விரும்பினால் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அருகில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மேற்படி குழுவினரிடம் நேரடியாக அளிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, தமிழ்நாடு கொங்குநாடு இளைஞர் பேரவை கரூர் மாவட்ட செயலாளர் சிபிஐ அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என கோரி மனு அளிக்க வந்தார்.
இதையும் படிங்க: செங்கோட்டையனுக்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு வாபஸ்... விஜய் எடுத்த அதிரடி முடிவு...!
இன்று தான்தோன்றி மலை சிபிஐ அலுவலகத்திற்கு தமிழ்நாடு கொங்கு இளைஞர் தமிழ்நாடு பேரவை (தனியரசு) கட்சியின் சார்பாக கரூர் மாவட்ட செயலாளர் அருள் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் காவல்துறை, நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாத காரணத்தினால் நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். விதிகளை பின்பற்றாத விஜய் மற்றும் அவரது கட்சியினர் காரணம் எனவே அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்க வந்துள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: திடீர் ட்விஸ்ட்...!! கரூர் வழக்கை சிபிஐ விசாரிக்கக் கூடாது... தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்...!