தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகள் இன்னும் தொடர்கின்றன என்பதை உணர்த்தும் கொடூரமான சம்பவம் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் 2025 ஜூலை 27 அன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கவின் செல்வகணேஷ் படுகொலை செய்யப்பட்டார். சென்னையில் ஐடி பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.
கவின், திருநெல்வேலியில் சித்த மருத்துவராகப் பணியாற்றிய சுபாஷினியை பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். இருவரும் ஒரே பள்ளியில் படித்த நண்பர்களாகத் தொடங்கி, ஏழு ஆண்டுகளாக உறவு வைத்திருந்தனர். சுபாஷினியின் தம்பி சுர்ஜித் இந்த உறவை எதிர்த்தார். பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கவினை சந்திக்க அழைத்துச் சென்ற சுர்ஜித், சாதி ரீதியாக இழிவாகப் பேசி, மறைத்து வைத்திருந்த அரிவாளால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தார்.

இந்தக் கொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கவினின் குடும்பத்தினர் சுர்ஜித்தின் பெற்றோர் துணை ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணவேணி மீதும் குற்றம் சாட்டினர். போலீசார் சுர்ஜித்தை உடனடியாகக் கைது செய்தனர். பின்னர் அவரது தந்தை சரவணனும் கைது செய்யப்பட்டார். வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. SC/ST சட்டப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டன. கவினின் உடலை ஒப்படைக்கக் கோரி குடும்பத்தினர் ஐந்து நாட்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தர்மேந்திர பிரதான் பாவம்... மோடியை பதவி விலக சொல்லுங்க..! கொளுத்திப் போட்ட திருமா..!
இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. கவின் ஆணவப்படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. இன்று கவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் வன்னி அரசு கவினின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர்களின் முக்கிய கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி! அமைச்சர் வன்னியரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!