திருச்சூர் நகர மகளிர் காவல் நிலைய அதிகாரி அபர்ணா குமார், கடுமையான போக்குவரத்து நெரிசலின் போது ஆபத்தான நிலையில் இருந்த ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸுக்கு முன் ஓடிச் சென்று, அது செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார். அப்போது ஆம்புலன்ஸில் இருந்த ஊழியர் எடுத்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் திருச்சூரில் கோலோத்தும் பாடத்தில் உள்ள அஸ்வினி சந்திப்பில் அபர்ணா குமார் பிங்க் நிற போலீஸ் வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து ஜூபிலி மிஷன் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியுடன் சென்று கொண்டிருந்தது.
ஆனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனத்தால் முன்னோக்கி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் சைரனை அடித்தபடி முன்னோக்கி செல்ல முடியாமல் நின்றது. இதைக் கண்ட அபர்ணா குமார் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருப்பதை உணர்ந்து தனது காரில் இருந்து இறங்கி ஆம்புலன்ஸ் முன்னாள் நீண்ட தூரம் ஓடி படியே முன்னால் இருந்த வாகன ஓட்டுநர்களை வேகத்தைக் குறைக்கச் சொல்லியும், வாகனங்களை ஓரமாக நிறுத்தவும் அறிவுறுத்தி ஆம்புலன்ஸ் தடையின்றி செல்வதற்கு வழிவகை செய்து கொடுத்தார்.
இதையும் படிங்க: பகீர் காட்சிகள்... ஆம்புலன்ஸ் மீது நேருக்கு நேர் மோதிய கார் - 2 பேர் பலி...!
நீண்ட தூரம் ஓடிச் சென்று வாகனங்களை ஒழுங்கு படுத்திய பெண் காவல்துறை அதிகாரியின் செயலை ஆம்புலன்ஸில் இருந்த ஊழியர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் அந்த வீடியோ தற்பொழுது வைரலாக பரவியது இதைப் பார்த்த உயர் காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்களும் பெண் காவல் அதிகாரியின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
இந்த வீடியோ கேரள காவல்துறையின் சமூக ஊடகக் தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் பாராட்டினாலும் ஒரு காவல் அதிகாரியாக தனது கடமையை செய்ததாக பெண் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, 2002 ஆம் ஆண்டு கேரள காவல்துறையில் அபர்ணா சேர்ந்தார். 2008 ஆம் ஆண்டு ஒல்லூர் காவல் நிலையத்தில் பெண் காவலராக இருந்தபோது மருத்துவமனையில் இறந்து போன பெண்ணின் உடலை சிகிச்சைக்கான பணத்தை கட்ட முடியாத காரணத்தினால் ஒப்படைக்க மறுத்த மருத்துவமனை நிர்வாகத்தின் முன் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அபர்ணா தனது மூன்று தங்க வளையல்களைக் கழற்றி கொடுத்து அந்த பெண்ணின் சடலத்தை மீட்க குடும்பத்தினருக்கு உதவி செய்தார்.
இதேபோல 2019 ஆம் ஆண்டில், இரிஞ்ஞலக்குட உள்ள திருச்சூர் கிராமப்புற மகளிர் காவல் நிலையத்தில் மூத்த சிவில் காவல் அதிகாரியாகப் பணியாற்றியபோது , புற்றுநோய் நோயாளிகளுக்கு விக் வைப்பதற்காக தனது தலைமுடியை முழுவதுமாக வெட்டி தானமாக வழங்கி உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ഓരോ ജീവനും വിലപ്പെട്ടത്🥰
അപകടാവസ്ഥയിലായ ഒരു ജീവനും കൊണ്ടാണ് ഓരോ ആംബുലൻസും വരുന്നത്. ആംബുലൻസ് വരുന്ന സൂചന ലഭിച്ചാൽ ആംബുലൻസിന് എത്രയും വേഗം കടന്നു പോകാൻ വഴിയൊരുക്കുക എന്നതാണ് നമ്മുടെ കടമ.#keralapolice pic.twitter.com/UnXIatUXxT
— Kerala Police (@TheKeralaPolice) August 10, 2025
இதையும் படிங்க: ஆம்புலன்சில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. பீகாரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!